நமதருகில் நிற்கும் இறைவன் அதை உணர மறுக்கும் மனிதம்

கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?” என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான்.

அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை.

கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா? என்று இப்போது அவன் உரத்தக் குரலில் கத்தினான். அப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை.

கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,”என்று இப்போது அவன் வேண்டினான்.. அப்போது வானில் ஒரு தாரகை சுடர் விட்டுப் பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை.

கடவுளே,எனக்கு ஒரு அதிசயத்தைக் காட்டு, என்று பிரார்த்தனை செய்தான். அப்போது அருகில் ஒரு குழந்தை பிறந்து அழும் சப்தம் கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை.

கடவுளே,நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ள என்னை நீ தொட வேண்டும், என்று கூவினான்.

அப்போது அவன் தோளில் ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது. அவன் அதைக் கையால் அப்புறப்படுத்தினான்.

கடவுள் நம்மைச் சுற்றி சிறிய எளிமையான விஷயங்களில் இருக்கிறார்.

எனவே அந்த அருட்கொடையைத் தவற விட்டு விடாதீர்கள்.

ஏனெனில் கடவுள் நீங்கள் எதிர்பார்க்கும் வடிவில் வருவார் என்று எதிர்பார்க்காதீர்கள்.
வாழ்க நலமுடன் 🙏 உயர்க வளமுடன்
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ் P. S. Raj B. Lit, MA Astro
7558156423

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *