ஆண்டாளின் கிளிக்கும் மீனாட்சியின் கிளிக்கும் வேறுபாடு உண்டு….

சுகபாணி என மீனாட்சிக்கு மட்டுமே பெயர். கிளியைக் கையில் பிடித்தவள் என்று பொருள்.
அந்த கிளி மீனாட்சிக்கு அலங்காரமாய் இருக்கிறது. அதற்கு தாரணார்த்தம் என்று பெயர். அலங்காரமாய் தரித்து இருப்பவள். அதனால் வலக்கையில் வைத்திருக்கிறாள். கையில் மலர்ச்செண்டு வைத்திருப்பவர் கூட வலக்கையில் தானே வைத்திருப்பார்கள். அது போல மீனாளின் கையில் அலங்காரமாய் கிளி உள்ளது.
ஆண்டாள் கையில் இடப்புறம் தான் கிளி இருக்கிறது. அது ஏன்?
இன்னமுது ஊட்டி அந்த கிளியை ஆண்டாள் வளர்க்கிறாளாம். இடது கையில் கிளி இருந்தால் தானே வலது கையால் உணவு ஊட்ட முடியும்.
தாய்மார்கள் இடது பக்க இடுப்பில் வைத்துக்கொண்டு தானே வலது கையால் குழந்தைக்கு சாதம் ஊட்டுவார்கள். அதுபோல ஆண்டாள் கிளியை போஷிப்பதற்காக இடதுபக்கம் வைத்திருக்காள். இதுக்கு போஷனார்தம் என்பார்கள்.
ஆகவே இருவர் கையிலும் கிளிகள் இருந்தாலும் காரணம் வெவ்வேறு.உண்டு…

