- கோவிலில் தூங்க கூடாது.
- கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது.
- புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.
- கோயில் குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
- கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
- தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
- சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
- தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக் கூடாது.
- எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்துப் பேசக் கூடாது.
- தலையில் துணி ,தொப்பி அணியக் கூடாது.
- விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது (அதாவது கருவறை இருட்டாக இருக்கும் சமயத்தில் இறைவனை வணங்குதல் கூடாது).
- அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது.
- குளிக்காமல் கோயிலுக்குள் போகக் கூடாது
- கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.
- மனிதர்கள் காலில் விழுந்து தெய்வ சன்னதியின் முன்பு வணங்கக் கூடாது.
- கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது.
- படிகளில் உட்காரக் கூடாது.
- கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக் கூடாது.
- சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.
- வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக் கூடாது.
- மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக் கூடாது.
- கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது
வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் 🙏🍇🍎🍇
வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்டு ராஜ் P.S
755815642