“ராகுவை போல கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும்மில்லை
என கூறுகின்றன.
“பூர்வபாராசர்யம் ”
“பிருஹத் ஜாதகம் ”
“ஜ்யோதிஷ ரத்னாகரம்” போன்ற புராதன மகத்தான ஜோதிட கிரந்தங்கள்
லாட்டரி, சூதாட்டம் என்று எதிர்பாராத புதையல்.
சிலரது திடீரெனவாரிசாக சொத்து கிடைத்தல், ராஜ ஸன்மானம்,வறுமையில் பிறந்த ஏழை குழந்தை பணக்கார குடும்பத்தில் ஸ்வீகாரம்
{ வளர்ப்பு குழந்தையாக }
செல்வது போன்ற திடீர் யௌக பலன்களை ராகு சனி சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களால் மட்டுமே தந்தருள முடியும் மற்ற ஆறு கிரகங்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது
“இரவில் ஓட்டாண்டியாகப் படுக்க சென்றவன் காலையில் குபேரனாக கண்விழிப்பான் ”
ராகுவின் கருணையினால் என கூறுகிறது நாடி ஜோதிட சாஸ்திர நூல் ஒன்று.
இருப்பினும் ராகு கொடுப்பதில் ஒரேயொரு குறையும் உண்டு.
அது என்னவென்றால் பல தருணங்களில் தவறான வழியில் செல்வத்தை வாரி வழங்குவார்.
போதைப்பொருள் கடத்தல், ஹவாலா மூலம் பணம் கடத்தல், விபச்சாரம் போன்ற பாவத்தை விளைவிக்கும் வழிகளில் மனதை செலுத்தும் வாய்ப்புகளையும் உருவாக்கி தருவார் ராகு.
ஜோதிட கலையில் களத்திர, காமஸ்தானம் எனப்படும் 7ம் இடத்தில் ராகு மற்றொரு பாப கிரகத்தின் சேர்க்கையும் பார்வையும் ஏற்பட்டு அவரது திசை புத்தியும் நிகழ்ந்தால் கள்ளக்காதல் தாய் நாட்டை எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தல் பிறர் மனைநயத்தல் போன்ற தீய செயல்களில் மனம்ஈடுபடும் ஆதலால் ஒரு ஜாதகத்தில் உயர்வு தாழ்வு நிர்ணயிப்பதில் ராகு வின் நிலை மிக மிக முக்கியமாக வலியுறுத்துகிறது ஜோதிடம்.
“காலசர்ப்ப தோஷம்”
ஜெனன கால ஜாதகத்தில் ராகு கேதுவிற்கு இடையே அனைத்து கிரகங்களும் லக்கினமும் அமைந்திருக்கும் போது அந்த கிரக நிலைகள் கால சர்ப்ப தோஷத்தை விளைவிக்கும் ன ஜோதிட நூல்கள் கூறுகிறது.
ஆயினும்
பிருஹத் ஸம்ஹிதை
பிருஹத் ஜாதகம்
பூர்வ பாராசர்யம்
போன்ற ஆதி கிரந்தங்கள் கால சர்ப்ப தோஷத்தை ஏற்க வில்லை
எனினும் “உத்திர காலாம்தம்”
ஜ்யோதிஷ அலங்காரம்
பூர்வஜென்ம நிர்ணய சாரம் ஜோதிஷரத்னாவளி ஆகிய பிற்கால நூல்கள் கால சர்ப்ப தோஷம் உள்ளதை விவரித்துள்ளது.
சில அரிய கிரக நிலைகளில் ராகு நன்மைகளையும் அளித்தருள்வார்.
ஜெனனகால ஜாதகத்தில் லக்கனத்திலிருந்து 5மற்றும்12ம் இடங்களுக்கு ராகுவின் ஆதிக்கம் அல்லது குரு கேது சேர்க்கை இருப்பின் பல பிறவிகளிலும் கிடைத்தற்கரிய
“கங்கா ஸ்நான யோகம்”கிட்டும் என்பது மகரிஷிகளின் வாக்கு ஆதலால் நமது பாவ புண்ணிய ங்களுக்கு ஏற்றபடி தான் ராகுவும் சனி பகவானும் நமக்கு நன்மை தீமைகளை விளைவிக்கின்றனரே தவிர தங்கள் இச்சையாக எதையும் விளைவிப்பது கிடையாது
வேதமித்ரா ஜோதிட மையம் veddameethra astrologer: ROCKFORT RAJ P.S
keela street
uyyakondan thirumalai
trichy-620 102
https://youtube.com/channel/UCS1KEmerD4XyGTVVz4cGujQ
ராக்போர்ட் ராஜ்.P.S
B.Lit,MA Astro
7558156423
வாழ்க வளமுடன் உயர்க நலமுடன்