குமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உள்ள சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி பற்றி பார்ப்போம்.

“பூ போட்டு பார்த்து திருமண பொருத்தம்”

ஆம் அன்பர்களே ஆணோ பெண்ணோ யார் ஒருவர் வீட்டில் ஒருவருக்கு திருமணம் என்றால் திருமண பொருத்தம் பார்ப்பது பெரியோர்களின் கடமை ஆகும்.

அதன் அடிப்படையில் சிலர் ஜாதகத்தில் உள்ள பொருத்தத்தை யும் வேறு சிலர் குலதெய்வ த்திடம்  அனுமதி பெறுவதை பெரிதாக நினைப்பார்கள் அல்லது நம்புவார்கள் அல்லவா அந்த வகையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருமணத்திற்கு பூ பொருத்தம் பார்ப்பது என்று ஒருசிறப்பு வாய்ந்த ஒரு சடங்காக இங்கு உள்ளது ஆம் நண்பர்களே திருமண ஏற்பாடுகளை செய்பவர்கள் மாப்பிள்ளை வீட்டாராக இருந்தாலும் சரி பெண்வீட்டாராக இருந்தாலும் சரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு வந்து பூ பொருத்தம் பார்ப்பது வழக்கம் அதாவது நமது பக்கம் பேப்பரில் போடுவது போல அல்லாமல் உயிரோட்டம் உள்ள அதாவது புதிய  வெற்றிலை வாங்கி வந்து அந்த வெற்றிலையில்  ஒன்றில் வெண்மை நிற பூவை  வைத்து கட்டி

மற்றொன்றில் அதேபோல் வெற்றிலையில் சிகப்பு நிற பூவை வைத்து கட்டி அதை அங்கு உள்ள பூசாரி இடம் கொடுக்க அந்த பூசாரியும் அதை அம்மாவின் திரு பாதத்தில் வைத்து பூஜை நடத்துவார்கள் அதன் பிறகு அதை தட்டில் வைத்து அப்படியே சம்மந்தப்பட்டவர்களிடம் எடுத்து வந்து கொடுப்பார்கள் அந்த சம்மந்தப்பட்ட ஆண் வீட்டாரோ அல்லது பெண் வீட்டாரோ அந்த தட்டில் உள்ள வெற்றிலை முடிச்சை ஏதாவதொரு முடிச்சை எடுத்து பிரித்து பார்ப்பார்கள் தாங்கள் நினைத்தது போலவே பூ வந்தால் அம்மனின் அனுமதி கிடைத்து விட்டதாகவும் அம்மாவே நேரில் வந்து நின்று திருமணத்தை நடத்தி தருவதாக வும் இங்கு உள்ள அல்லது வந்திருக்கும் பக்தர்கள் கூறுவது கேட்கும் நம்மையே வியப்பில் ஆழ்த்தியது . அவர்கள் விரும்பிய அல்லது நினைத்தது போலவே பூ கிடைத்த மகிழ்ச்சியில்  திருமண காரியங்களை தொடங்கி சிறப்பாக திருமணம் நடந்து முடிகின்றது.

அதற்கு மாறாக அவர்கள் நினைத்த நிறத்தில் பூ வராவிட்டால் இந்த திருமணத்தில் அம்மனுக்கு சம்மதம் இல்லை என்று உணர்ந்து இந்த காரியத்தை நிறுத்தி விடுவார்கள் அல்லது இந்த வரனை கைவிட்டு விட்டு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகளை பார்க்க தொடங்கி விடுவார்கள்.

அதுவே இங்கு இன்றளவும் உள்ள சடங்கு சம்பிரதாய மாக உள்ளது.

அதற்கு காரணம் பூ பொருத்தம் மூலம் அமையும் திருமண வாழ்க்கை அனைத்து செல்வங்களையும் அந்த தம்பதிகளுக்கு அருளும் அல்லது கிடைக்கும் என்பது பக்தர்களின்அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

veddameethra astrology site

ph:7558156423

keela street

uyyakondan thirumal

trichy-620 102

sir. ROCKFORT RAJ P.S

வேதமித்ரா ஜோதிட மையம்

ராக்போர்ட் ராஜ்.P.S

B.Lit,MA -Astro

7558156423

வாழ்க வளமுடன் உயர்க நலமுடன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *