veddameethra: தலை வலியால் தலைகீழாக மாறிய வாழ்க்கை நிலை நன்றி அந்த 🐟🎣🐠

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன்,

அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான்.

அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக் கொண்டார்.

குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.
முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை.

மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், “இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது”.

இளைஞன், ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொன்னான்.

முதலாளிக்கு கோபம் வந்து விட்டது.
“இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்கா விட்டால்,
உன் வேலை பறி
போய் விடும்”
என்று எச்சரித்தார்.

“சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?”

இளைஞன் சொன்னான்,
“933005 பவுண்டுகள்”.

அதிர்ச்சியடைந்த முதலாளி,
“அப்படி என்ன விற்றாய்”

வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்.”

“ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?”
இது முதலாளி.

“உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்கப் படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால்,

நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஓர் இருபது அடி நீளப்
படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்குத் தங்க இடம் இல்லாததால், மிகப்
பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்”

“அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?” நம்ப முடியாத முதலாளி கேட்டார்.

“இல்லை, அவர், தனக்குத் தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான்,
தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுது போக்கு என்று சொன்னேன்.”

முதலாளி கேட்டார்,
“ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?”

“அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக இருந்தேன்,
ஏன் ?”

“இங்கே வா,
என் நாற்காலியில் அமர்ந்து இந்தக் கடையைப் பார்த்துக் கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்து விட்டு வருகிறேன். என்று சொன்னார்.
இன்றைய நடைமுறை எதார்த்தமான பதிவு

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ் P. S BLit, MA – Astro
7558156423

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *