🙏கோவிலில் செய்யக் கூடாதவை🙏

  1. கோவிலில் தூங்க கூடாது.
  2. கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது.
  3. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.
  4. கோயில் குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
  5. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
  6. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
  7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
  8. தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக் கூடாது.
  9. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்துப் பேசக் கூடாது.
  10. தலையில் துணி ,தொப்பி அணியக் கூடாது.
  11. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது (அதாவது கருவறை இருட்டாக இருக்கும் சமயத்தில் இறைவனை வணங்குதல் கூடாது).
  12. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது.
  13. குளிக்காமல் கோயிலுக்குள் போகக் கூடாது
  14. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.
  15. மனிதர்கள் காலில் விழுந்து தெய்வ சன்னதியின் முன்பு வணங்கக் கூடாது.
  16. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது.
  17. படிகளில் உட்காரக் கூடாது.
  18. கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக் கூடாது.
  19. சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.
  20. வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக் கூடாது.
  21. மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக் கூடாது.
  22. கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் 🙏🍇🍎🍇
வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்டு ராஜ் P.S
755815642

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *