!!!திருமணம் தடையா திருமணஞ்சேரி!!!
திருமணம் தடையா திருமணஞ்சேரி பொதுவாக ஒரு ஒரு தலத்தை அல்லது ஒரு தகவலை எல்லாரும் சொல்வது உண்டு. எல்லா உணவும் எல்லாருக்கும் பிடிக்காது அல்லது ஒத்துக்கொள்ளாது அதேபோல் எல்லா மருந்தும் எல்லாருக்கும் வேலை செய்வது இல்லை அது போல தான் வழிபாட்டு தலங்களும்அல்லது பரிகார தலங்களும் மேலும் ஒரு உதாரணம்
“ஆழ் பாதி ஆடை பாதி” என்று சொல்லி கேட்டுஇருப்போம்.
ஆடைகளில் இது ஆண்களுக்கு உண்டான ஆடைகள் இது பெண்களுக்கு உண்டான ஆடைகள் என்று ரகம் தரம் பிரித்து வைத்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று அதுபோல தான் பரிகார தலங்களும்.
எனது அனுபவத்தில்
பலரையும் இந்த தலத்திற்கு நானே அனுப்பி வைத்ததுண்டு அதில் அநேக பெண்களுக்கு
திருமணம் ( 10க்கு 8 ) கைகூடிஉள்ளதையும்.
அதேபோல் ஆண்களுக்கு
( 10க்கு 2 )
ஏதோ ஒன்று இரண்டு ஆண்களுக்கு மட்டும் நடப்பதை கண்கூடாக காண முடிந்தது இதில் என்ன காரணம் என்று ஆய்வு செய்த போது தான் தெரியவந்தது.
இந்த மண்ணில் ஒரு தேவலோக பெண் சாபம் பெற்று அந்த சாபத்தினால் மனிதனாக அல்ல மாறாக பசு மாடாக பிறப்பு எடுத்து அந்த சாப காலம் முடியும் வரை பாடாத கஷ்டப்பட்டு ஆனால் அதிலும் சிவ லிங்கத்தை விடாது பக்தியால் பற்றி கொள்ள அந்த பக்தியின் காரணமாக அந்த சாப காலம் முடியும் தறுவாயில் பசுவாக இருந்த அந்த தேவலோக பெண்ணுக்கு விம்மோசனம் பெற்று இறைவனே அந்த பெண்ணை மணந்து கொண்டார். இந்த இடத்திலே அந்த பெண் என்ன நினைத்திருப்பார்கள்
தெரியவில்லையா சொல்கிறேன் நண்பர்களே!
நமக்கு ஒரு துக்க நிகழ்ச்சி அல்லது கஷ்டமான சம்பவம்அல்லது இக்கட்டான சூழ்நிலையில் ஒரு காரியம் நடந்தால் உடனே நாம் சொல்வது என்ன அப்பப்பா நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரகூடாது ஏன் என் எதிரிக்கு கூட வரகூடாது என்று சரிதானே!!!
அதேபோல் தான் அன்று அந்த பெண்ணும் எண்ணினால் ஏன் அதை ஈசனிடம் ஒரு வரமாகவும் கேட்டு பெற்றுக்கொண்டார்.
என்ன அந்த வரம் என்று நீங்கள் கேட்பது எனக்கு நன்றாக கேட்கிறது.
அது வேறு ஒன்றும் இல்லை
என்னை போல உடலாலும் மனதாலும் வேதையுடன் வேண்டி வரும் பெண்களுக்கு அவர்கள் எதிர் பார்த்து வரும் காரியத்தை நடக்க செய்ய அல்லது கைகூட செய்ய வேண்டியது தங்களின் கடமை அதை எனக்கு வரமாக தர வேண்டும் என்று கேட்டு பெற்று கொண்டார் .
ஒருவரிடம் இது உங்க கடமை இத நீங்க தான் செய்யனும் என்று நம்மிடமே ஒருவர் சொன்னால் நாம் என்ன செய்வோமோ அதை தான் இன்று வரை இறைவன் ஈசன் இங்கு செய்து வருகிறார்.
அதனால் தான் இந்த தலம் பெண்களுக்கு ( கே )உண்டான திருமண தடை நீக்கும் தலமாகும் ஆகும்.
மேலும் மும்மூர்த்திகளும் இங்கு வாசம் செய்தார்கள் எப்படி என்றால்
★) இடையனாக
( மாடு மேய்ப்பவராக )— விஷ்னு
★) சாபத்தை நீக்கி
மணமகனாக — ஈசனும்
★) அந்த திருமண
புரோகிதராக நான் முகன் — பிரம்மா
என்று வந்த இடம் இந்த திருத்தலம் ஆகவே இந்த பிரபஞ்ச தாய் அந்த ஆக்ரோஷன சக்தியைஉள்வாங்கி இன்று வரை அதை செய்து வருகிறார்கள்.
சரி இது வரை சொன்னவரைக்கும் சரி தான் அப்படினா ஆண்களுக்கு உண்டான பரிகார ஸ்தலம் எது என்று கேட்பதும் தெரிகிறது. அடுத்த பதிவில் அந்த திருதலம் பற்றி பார்ப்போம்.
ஶ்ரீஅருள்மிகு உத்வாக நாதர் என்றும் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றமர்ந்த ஈசனுடனமர் கோகிலாம்பிகை
தாயை வழிபாடு செய்து அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவன்,
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்.
ராக்போர்ட் ராஜ்.P.S,
B.Lit, MA-Astro
7558156423
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்