சித்தர்கள் வழியில் வீட்டில் திருவிளக்கை ஏற்றினால் மட்டும் போதாது அதை பராமரிக்கும் முறையும் நிச்சயம்தெரிந்திருக்க வேண்டும். பெண்கள்தான் குத்து விளக்கை ஏற்றி குளிர வைக்க வேண்டும் திருவிளக்கு மகாலெட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. விளக்கை துலக்குவது அவசியம்.விளக்கை துலக்கக்கூடநல்ல நாளில் தான் செய்ய வேண்டும் .
ஆண்டவன் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள் தான் என்று சொல்லும் நண்பர்களுக்காக நமது சித்தர்கள் விளக்கை துலக்குவது கூட ஒருசில நாட்களில் தான் என்றும் எல்லா நாட்களிலும் எல்லா வேலையும் செய்ய முடியாது என்பதை உணர்த்தவே ஆகும்.
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் தான் குத்து விளக்கு துலக்குவது அவசியம் ஆகும்.
வெள்ளிக்கிழமை செவ்வாய் கிழமை இரண்டும் கலைக்கிரகங்களுக்கு உரிய நாட்கள் ஆகும்.
அதிக பலன் தரும் வல்லமை படைத்த ( பொருந்திய ) நாட்கள் ஆகும் .
அதற்கான
காரணம் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை விளக்கில் குபேர தயைட்சணி குடியிருப்பாள் .
அதாவது செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் குபேர தயைட்சணி விளக்கில் குடியிருப்பதால் அந்த காலங்களில் விளக்கை கழுவுவதால் அவள் வெளியேறி விடுவாள்.
வெள்ளி கிழமை, செவ்வாய் கிழமை களில் விளக்கு சுத்தமாக இருக்க வேண்டும்.
எனவே திங்கட்கிழமை களில் விளக்கு ஏற்றி குளிரவைத்தவுடன் இரவு மணி 9.00முதல் 9.30க்குள் விளக்கை துலக்கி விடுவது நல்லது .
ஏனெனில் விளக்கில் குபேர சங்க நிதி தயைட்சணி குடியேறுவாள்.
ஆகவே விளக்கைகழுவத் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை முன் இரவிலும்
சனி கிழமைஞாயிற்றுக்கிழமை மட்டும் தேர்ந்தெடுத்து கொடுத்து உள்ளார்கள் சித்த புருஷர்கள்.
அதுபோல விஷேச தினங்கள் ஆகிய பொங்கல் பண்டிகை // ஆயுத பூஜை // தீபாவளி பண்டிகை // விநாயகர் சதுர்த்தி // சங்கயஹர சதுர்த்தி // சஷ்டி விரததினம் .
இது போன்ற குறிப்பிட்ட விஷேச நாட்களுக்கு மட்டும் விளக்கை துலக்க தடையேதும் இல்லை.
சுத்தமான தண்ணீரினால் முதலில் அலம்பி பிறகு நல்ல துணியினால் நன்றாக துடைத்து தரம் நிறைந்த விபூதியினால் விளக்கைத் தேய்த்து விட வேண்டும்.
விளக்கை சுத்தம் செய்வதினால் ஒவ்வொரு கிழமைக்கும் மனம் நிறைந்த ரகசிய பலன் உண்டு அதைபற்றி அடுத்த பதிவில் காணும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது
உங்கள்
வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்ட் ராஜ் P.S.RAJ,
B.Lit , MA Astro
7558156423
வாழ்க நலமுடன் உயர்க வளமுடன்🙏🙏🙏🙏