வினை விதைத்தவன் வினை அறுப்பான் நாம் முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும் என்று கேட்டுள்ளேம்
இதற்கும் நமது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கும் ஜோதிட ரீதியாக தொடர்பு பற்றி பார்ப்போம்
கிரக அமைப்பு இப்படி இருந்தால் இது பெண் சாபம் என்றும்
கிரக அமைப்பு இப்படி இருந்தால் இது பிதுர் சாபம் என்றெல்லாம் சில ஜோதிட தகவல்கள் இருப்பது உண்மை தான் ஆனால் அதை கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது.
எப்படி அறிவது?
ஒரு சம்பவ ரீதியாக முடிவெடுக்க மூன்று விசயங்கள் அவசியம்
1) காரணங்கள் ( causes)
2) விளைவுகள் ( Effects)
3) தீர்வுகள் &பரிகாரம் ( solutions Or remedies).
இந்த மூன்றும் வாழ்வியலுக்கும்
உலகியலுக்கும் பொருந்தும்.
காரணத்தை கண்டுபிடித்து தீர்வினைச் சொல்லலாம்
அது போல கிரக நிலையை வைத்துக் கொண்டு தீர்வுகளை சொல்வது பல நேரத்தில் சரியாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்…
பல சாபங்கள் உரிய கோள்கள் உள்ள பல ஜாதகர்கள் நன்றாக இருக்கிறார்கள்.
சுபகாரியங்கள்
நோய் நொடி இல்லாமல்
தொழில் சிறப்பாக
இப்படி பல விதங்களில் நன்றாக இருக்கும் நபர்களுக்கு பரிகாரங்கள் தேவையா??
தேவையே இல்லை. சரிதானே.
அதே சமயம்
சுபகாரியங்கள் தடை
நோய் நொடியால் பாதிப்பு
தொழில் தடை / நஷ்டம்
இப்படி பல விதங்களில் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு பரிகாரங்கள் தேவை தானே… .
இந்த பாதிப்பிலிருந்த ஒரு குடும்பம் நம்மை பார்க்க வந்தார்கள் அவர்கள் அடுத்த அடுத்த முயற்சிகளும் தோல்வி நஷ்டம் தான் மீண்டும் மீண்டும் ஏற்பட்டது.
அவர்களுக்கு தெரிந்த ஜோதிட ரிடம் சென்றதாகவும் அவர் சனி கிரக தோஷம் அதலால் தான் தொல்லைகள் என்று ஒரு பரிகாரம் சொன்னார் அதை செய்தோம் சரியாக இல்லை
இன்னொரு ஜோதிடரிடம் சென்றதாகவும் அவர் குரு கிரக தோஷம் அதலால் தான் தொல்லைகள் என்று ஒரு பரிகாரம் சொன்னார். பல ஆயிரம் ரூபாய் செலவில்அதை செய்தோம் . அங்கேயும் சரியாக இல்லை.
மற்றொருவர்
வீட்டில் கணபதி ஹோமம் மற்றும் குபேரன் ஹோமம்
நவகிரகங்கள் சாந்தி ஹோமம் என்று சொல்லி சிலரை வைத்து ஹோமம் நடந்தது ஆனால் எந்த பலனும் இல்லை.
சரி சற்று பொறுங்கள்.
இன்று போய் நாளைக்கு வாங்கள் என்று விநாயகர் சனிபகவான் வசம் எப்படி சொன்னாரோ அதேபோல் சொல்லி அனுப்பிய பிறகு
அந்த ஜாதகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது கிரக நிலைகள்/ சேர்க்கை / பரிவர்த்தனைகள் / நட்சத்திர சாரம் மற்றும் அதன் அதிபதி களின் நிலை மற்றும் திதி சூன்யம் மற்றும் முடக்கு ராசி என்று பல பலன்கள் ஆராய்ந்து பார்த்து விட்டு மறு நாள் அவர்கள் வந்ததும் கிரக நிலைகளை ஆராய்ந்த வகையில் இந்த ஜாதகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருப்பது போல் தெரியவில்லை தங்கள்
உடல் நலம் என்று பார்க்க 5ம் பாவகம்
வியாபாரம் என்று பார்க்க7ம் பாவகம் ஆகும்
எனவே நான் சொல்வது போல் செய்வீர்களா என்று கேட்ட போது அவர்கள் சொல்லுங்கள்
என்றார்கள்.
நீங்கள் இதுவரை பல பரிகாரங்கள் செய்து விட்டீர்கள் அதெல்லாம் இருக்கட்டும் இப்போது நீங்கள் ஒரு விஷயம் செய்தால் நிச்சயம் தீர்வுகள் கிடைக்கும் என்று சொல்ல ஆவலோடு சொல்லுங்கள் என்றார் நீங்கள் வினை விதைத்து விட்டீர்கள் அதாவது துரோகம் செய்துள்ளதாகத்தான் கிரகங்கள் குறி காட்டுகிறது என்றேன்.
அதற்குவிளக்கம் என்ன ??? என்றார்.
உங்களால் அல்லது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நபர்களால் ஏதோ ஒரு குடும்பம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே நீங்கள் அமைதியாக தனிமையாக யோசித்து பாருங்கள். அப்பொழுது ஞாபகம் வரும் அப்போது முதலில் அந்த நபருக்கு பரிகாரம் செய்து விட்டு பிறகு தெய்வத்திடம் வழிபட்டு வாருங்கள்.
உங்கள் செயலுக்கு மன பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
காரணம்
உடல் நலம் என்று பார்க்க 5ம் பாவகம்
வியாபாரம் என்று பார்க்க7ம் பாவகம் ஆகும்
5ம் இடத்திற்கு7 ம் இடம் 3ராக வரும்
7 ம் இடத்திற்கு 5 ம் இடம் 11ஆக வரும்
• ஆகவே அந்த காரக உறவுகளுக்கு தாங்கள் செய்த துரோகம் நேரடியாக அல்லாமல் மறைமுகமாகவும்/நிழலாகவும் உங்களை சுற்றி கொண்டு உங்களை செயல் பட விடாமலும் உங்கள் செயலில் தடையையும் கொடுத்து தடுக்கிறது.
எனவே கவனம் என்று சொல்லி அனுப்பினேன்.
சில மாதங்களுக்கு பிறகு அவரை சந்திக்க நேர்ந்தது அப்போது அவரிடம் உங்களுக்கு தீர்வு கிடைத்ததா? என்று கேட்க
தீர்வு கிடைத்தது என்றும் தன்னுடைய குடும்பம் இப்போது நல்ல படியாக இருப்பதாகவும் வியாபாரமும் படி படியாக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்அந்த குடும்பம் ஒரு வகையில் முன்னேற்றம் அடைய உதவி உள்ளார்கள்.
உண்மையில் அத பரிகாரம் உடனே வேலை செய்வதோடு இல்லாமல் இவர்கள் குடும்பமும் ஒரு படி மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
கோவிலில் செய்வது மட்டும் தான் பரிகாரம் இல்லை.
இந்த மாதிரி நம்மால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செய்யும் உபகாரமும் // உதவியும் கோவிலில் செய்வதை விட பன்மடங்கு பலனை தரும்
வாழ்க நலமுடன் 🙏 உயர்க வளமுடன்
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்
ராக்போர்ட் ராஜ். P. S. Raj
B. Lit, MA Astro
75581 56423