திருமண பொருத்தம் பார்க்கும் போது தவறாமல் செய்ய வேண்டியவைகள் 🥰

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது இவர்களுக்குள் எவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டாலும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் வாழ்வார்கள் என்று சொல்லி இருந்த காரணத்தால் அந்த ஆண் மகன் என்னிடம் வந்து நடந்த ஒரு நிகழ்ச்சியை தங்களோடு பகிர்ந்து கொள்ளளாமா என்று சொல்லி அவர் சொன்ன குடும்ப சுவாரஸ்யமான சம்பவம் தங்களோடு
கக.. க.. போ
வீட்டில் ஒரு நாள் ஒரு முக்கிய விசயமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டது
சண்டையில் சமாதானம் செய்ய தெரியாமல் சாப்பாட்டிலாவது சமாதானம் செய்யலாம் என்று நினைத்து ஆசை மனைவியை சாப்பிட அழைத்தான்….!!!

தூக்கி வைத்த முகத்தை கொஞ்சமும் மாற்றாமல் வந்து நின்றாள்….!!!

தட்டு அவனுக்கு மட்டும் “டங் ” என்று வைக்கப் பட்டது….!!!

தண்ணீர் சொம்பும் “நங்” என்று தளும்பி நின்றது…!!!

சாப்பாடும் பரிமாறினாள் அவ்வாறே….!!!

சாப்பிட தொடங்கினான் அமைதியாக சமாதானம் செய்ய வழி தெரியாமல்….!!!

புரை ஏறியதை போல் நடித்தான். தலையை தட்டி விட வருவாள் என்று எண்ணி….!!!

“தண்ணியை குடிங்க ” என்ற அறிவுரை மட்டுமே வந்தது….!!!

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு நின்று பார்த்தான் முந்தானையை நீட்டுவாள் என்ற எதிர்பார்ப்போடு….!!!

வந்து விழுந்தது டவல்…!!!!

வழி ஏதுமின்றி அமைதியாக வந்து அமர்ந்து என்ன செய்யலாம் என்று யோசித்து அரை மணி நேரம் கடந்தது….!!!

ஏதோ சத்தம் கேட்டு எழுந்து டைனிங் ஹால் சென்றவன் விக்கித்து நின்று விட்டான்….!!!

அங்கே…. அவன் சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் அவன் பிரியமான காதல்காரி….!!!

இது போல திருமணம் செய்வதற்கு முன் பார்த்து செய்யலாம் புது மணமக்களுக்கு தான்
ஏற்கனவே மணமக்களாக உள்ள நபர்கள் இப்போது உள்ள நடைமுறைக்கு ஏற்றார் போல மாற்றம் செய்து மகிழ்ச்சி கண்டு இன்புற்றிருக்க ஏதேனும் ஜோதிட ரீதியாக உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ளலாம்

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன்🙏
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ் P.S
B.Lit, MA-Astro
7558156424

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *