திருந்தி வாழ திடீர் திருப்பம் ஒவ்வொரு வருக்கும் உண்டு. { சூழ்நிலைகள் வேறு வேறு }

ஒரு சமயம் வழக்கு மன்றத்தில் விசாரணைக்கு ஒரு வழக்கு வந்தது அப்போது அதை விசாரணை செய்த நீதிபதி பிட்பாக்கெட் அடித்த குற்றவாளியை நோக்கி ஏனப்பா நீ உன்னை மாற்றி கொள்ள மாட்டாயா எத்தனை தடவை சொன்னாலும் மீண்டும் மீண்டும் அதே தவறைசெய்து விட்டு வருகிறாயே என்று கேட்க அதற்கு அந்த பிட்பாக்கெட் அடித்த நபர் எத்தனை தடவை வந்தாலும் அதே தண்டனை தரும் உங்கள் சட்டத்தை மாற்றி கொள்ள மாட்டீர்களா என்று எதிர் வாதம் செய்ய  வழக்கு மன்றத்தில்அமர்ந்து இருந்த அனைவரும் சிரித்தனர் நீதிபதி சற்று யோசித்து அந்த ஜெயில் சூப்பரன்டை அழைத்து ஏதோ காதில் முனுமுனுத்தார் பிறகு பிட்பாக்கெட் ஜெயிலுக்கு வந்த பிறகு அவருடன் மேலும் ஒன்பது பிட்பாக்கெட் அடித்த நபர்களை சேர்த்து பத்து பேரையும் ஒரே செல்லில் அடைத்து வைத்து எதிர்த்து பேசிய பிட்பாக்கெட் நபரை அழைத்து நீ இங்கே இருக்கும் நாட்களில் தினமும் உழைக்க வேண்டும் அதற்கு உனக்கு சம்பளம் தரப்படும் அதை கொண்டு தான் நீ சாப்பிட்டு மீதம் உள்ள பணத்தை திருப்பி நீ வெளியே போகும் போது எடுத்து செல்லலாம் ஏன் என்றால் அது உன்னுடைய பணம் என்றதும் ஒரே சந்தோஷம் சரி என்று ஒத்து கொண்டு தனது அறைக்கு சென்று விட்டார். மற்ற ஒன்பது நபரையும்அழைத்து அவன் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை நீங்கள் அவனுக்கே தெரியாமலேயே பிட்பாக்கெட் அடித்து கொண்டு வந்து தந்தால் தான் உங்கள் ஒன்பது நபருக்கும் சாப்பாடு இல்லை என்றால் எப்போதும் அவனிடம் பிட்பாக்கெட் அடித்து வரும் வரை நீ அனைவரும் பட்டினி தான் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

முதல் நாள் அவனும் வேலை செய்து 200 ரூபாய் சம்பாதிக்க சிறிது நேரத்தில் அந்த பணத்தை காணாமல் தவித்தான் அவனுக்கு மட்டும் சாப்பாடு இல்லை என்று சொல்லி மற்றுஒன்பது நபருக்கும் சாப்பாடு பரிமாற பட்டது அவனே பசி தாங்காமல் துடிக்கும் நிலை கண்டு மற்ற ஒன்பது நபரும் மிகவும் வருத்தப்பட வேறு வழி இல்லை அவனுக்கு உதவி செய்தால் இவர்களுக்கு அந்த நிலை என்பதால் யாரும் உதவவில்லை. மறுநாள் வேலை செய்ய பசியுடனே சென்றான் வேலை செய்தான் சம்பளம் 200 நூறு ரூபாய்சம்பாதிக்க மறுநாள் அப்படியே பணத்தை காணவில்லை துடி துடித்து போனான்.கத்தினான் கதறினான் வேறு வழி இல்லை பணம் கொடுத்தால் தான் இவனுக்கு உணவு வழங்க படும் அனால் இவனிடம் பணம் இல்லை. பசி வேறு துவண்டு போன நிலையில் ஏதோ மீதும் இருந்த கொஞ்ச சோறு கொடுத்தார்கள். இவ்வாறுதண்டனை காலம் முடியும் போது அதே நீதிபதி ஜெயிலுக்கு வந்தார் சூப்பிரண்டு உடன் இருந்தார் .அந்தபத்து பிட்பாக்கெட் நபர்களை விசாரித்தார் எப்படி இருந்தது இந்த நாட்கள் எப்போதும் போல இருந்ததா என்று கேட்க ஆள் ஆளளுக்கு புலம்பி தீர்த்தார்கள்.காரணம் உழைத்த பணத்தை பறிகொடுத்து விட்டு பசியால் துடிக்கும் கொடுமையை கண்ணால் கண்டு வேதனை அளிக்கிறது எனவே இனிமேல் பிட்பாக்கெட் அடிக்க மாட்டோம் என்று சத்தியம் செய்தனர் மற்ற ஒன்பது போரும். அந்த ஒருநபரை விசாரிக்க அவன் நடுங்கி போய் ஐயா நான் இவ்வளவு நாள் ஏவ்வளவு பெரிய தவறு செய்தேன் என்பதை அனுபவ பூர்வமாக உணர்தியதற்கு நன்றி என்று சொல்லி விட்டு நீ அன்று சூப்பிரண்டு காதில் முனுமுனுத்தது இது தானா என்று கேட்டான் அதற்கு நீதிபதி சட்டத்தை மாற்றி அமைக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை ஆனால் ஒருசில விதிகளை மாறி அமைக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு .சரியா இனி உங்களை தவறான நிலையில் பார்க்க கூடாது சரியா என்று சொல்லி ஒவ்வொரு நபருக்கும் ஒரு நிறுவனத்தில்வேலை வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

இப்படி இல்லாவிட்டாலு ஒவ்வொருதனி நபரின் வாழ்விலும் ஏதோவொரு சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை காரணமாக ஒரு மாற்றம் ஏற்படும் திருப்புமுனை என்றும் சொல்லலாம் .

எனவே அனைவரும் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்

u

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் 🙏🍇🍎🍇
வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்டு ராஜ் P.S
7558156423

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *