தஞ்சையே ஒரு வரலாறு !!!தஞ்சையில் ஒரு வரலாறு!!!

தஞ்சையில் ஆறுபடை வீடுகளின் வரலாறு
தஞ்சையில் உள்ள ஆறு கோவில்களில் உள்ள முருகனை வழிப்பட்டாலே பல்வேறு இடங்களில் உள்ள அதாவது
★ திருப்பரங்குன்றம்
★ திருச்செந்தூர்
★ பழனி
★ பழமுதிர்ச்சோலை
★ சுவாமி மலை
★ திருத்தணி
ஆகிய இடங்களில் உள்ள ஆறுபடை முருகனை வழிபட்டதன் பயனாலாகிய அருள் கிடைக்கும்.
ஒரே நாளில் தஞ்சையில் உள்ள ஆறு முருகனையும் வழிபட்டால் எல்லா நலங்களும் வந்து சேரும்
1) தஞ்சை மேல அலங்கம் முருகன் கோவில் மலைமீது உள்ளது போல === திருப்பரங்குன்றம் ஆகும்.

2) ஆதியில் வடக்கு அடங்கம் முருகன் கோவில் சோலையாக இருந்ததன் காரணமாக == பழமுதிர்
சோலையாகவும்.
3) ஊரின் நடுவில் குறிச்சி தெரு முருகன் கோவில் திருத்தணியாகவும்.

4) ஆட்டு மந்தைத்தெரு முருகன் கோவில் அப்பனுக்கு உபதேசம் செய்த சுவாமி மலை ஆகும்.

5) ஆண்டித்திரு உருவத்தில் பழனியில் நவபாஷாணத்தால் சித்தர் போகரால் உருவாக்கப்பட்டது போல சின்ன
அரிசிக்காரத்தெரு முருகன் தனி ஆண்டித்திரு வுருவத்தில் அருள்புரிகிறார்.

6) விசாலமான திருச்செந்தூர் கடற்கரை யில் சூரனை சம்ஹாரம் செய்த முருகனை ஒத்த விசாலமான இடத்தில் அமைந்துள்ள பூக்காரத்தெரு முருகன் கோவில் திருச்செந்தூர் முருகனாக கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலித்து வருகிறார்.

இந்த ஆறுபடை பாதயாத்திரை குழு முதன் முதலில்12.08.1979 சித்தார்த்தி ஆண்டு ஆடி மாதத்தில் வரும் கடைசி ஞாயிறு அன்று ஆடி மாதம்27ம் தேதி வெள்ளை பிள்ளையார் கோவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

f

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் 🙏🍇🍎🍇
வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்டு ராஜ் P.S
7558156423

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *