சுவைக்கும் தேவைக்கும் பேர் போன நான் பிறந்த கதை

ஒரு பையனுக்கு புதுசா கல்யாணம் ஆகுது,கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போனவன் திரும்ப வரும்போது புது மனைவிக்கு ஆசையாய் முறுக்கு வாங்கிவந்திருக்கிறான்,அவன் மனைவி ராத்திரி பத்து மணிக்கு உட்கார்ந்து கடக்கு முடக்கு சத்தத்துடன் சாப்பிடுகிறாள்,……
அடுத்த நாள் காலையில் அவன் அம்மா சொல்றாங்க “பாத்து, வளர்த்து, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிவச்ச ஆத்தாளுக்கு இது வரை எதாவது வாங்கி கொடுத்து இருக்கியா,ஆனா நேத்து வந்தவளுக்கு முறுக்கு” என்று சொல்லி மகனுடன் தனது முதல் சண்டையை ஆரம்பித்திருக்கிறார் அவனது அம்மா.
அதுவரை கள்ளம், கபடம் தெரியாத அந்த பையனுக்கு ஒரு யோசனை,……..
முறுக்கு வாங்கி போய் கொடுத்தால் தானே பிரச்சனை,இன்று முதல் மனைவிக்கு அல்வா வாங்கி போய் கொடுப்போம் என்று வாங்கி செல்கிறான்,
அடுத்த நாள் அம்மா ஒன்றும் கேட்கவில்லை….. ஏன் என்றால,
அவனது மனைவி சாப்பிடும் போது சத்தம் வரவில்லை,அம்மாவை ஏமாற்ற முதன் முதலில் அல்வா பயன்பட்ட காரணத்தால்….
அடுத்தவர்களை ஏமாற்றுவதற்கு “அல்வா” கொடுப்பது என்ற பெயரும் வந்தது
அல்வா பிறந்த கதை … இதுதான்

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன்🙏
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ் P.S
B.Lit, MA-Astro
7558156424

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *