மனம் அது செம்மையானால் மந்திரம் அது ஜெயம் ஆகும். ஒரு சமயம் ஒரு ஊரில் கடுமையான உழைப்பாளி ஒருவர் இருந்தார். அவர் அயராத முயற்சியும் இடைவிடாத செயல் களும் ஓயாத உழைப்பும் கொண்ட அவரை சில நாட்கள் இல்லை. வெகு நாட்களாக ஒரு அவரையும் ஒருவர் தொடர்ந்து பார்த்து கொண்டே வந்தார். அந்த உழைப்பாளிக்கு கை கொடுத்து உதவுவதற்கு ஒருவரும் இல்லை பண உதவி அல்லது பொருள் உதவி செய்ய ஆளும் இல்லை அந்த நேரத்தில் அவரை தொடர்ந்து பார்த்து கொண்டு இருந்த நபர் அவரை அணுகி அவரிடம் என்னையும் தங்களுடன் வேலைக்கு அமர்த்தி கொள்ள முடியுமா என்று கேட்க அவரோ என்னால் முடியாது காரணம் வரும் வருமானம் எனக்கே பற்றவில்லை என்று சொல்ல வேலை கேட்ட நபர் ஐயா நான் வெகு நாட்களாக தங்களையும் தங்களது உழைப்பையும் நேர்மையும் தங்களது திறமையை பல சமயங்களில் கண்டு வியந்தது உண்டு. அதன் காரணமாகவே தங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தங்களிடம் வேலைக்கே சேர்வதற்கு ஆசை பட்டேன். நான் தங்களுடன் சேர்ந்து பணி செய்தால் தாங்கள் உயர்வடைய முடியும் என்று சொல்லி சம்பளம் ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். அந்த உழைப்பாளிக்கு மிகுந்த சந்தோஷம் யாருக்கு தான் இருக்காது சம்பளம் இல்லாத வேலைஆள் கிடைக்கும் போது சரி அவன் ஒரு கோரிக்கை விடுத்தார் அந்த உழைப்பாளிக்கு என்ன கோட்பானோ என்ற ஒரு பயம் கலந்த அச்சம் தோன்றியது சரி என்ன என்று கேட்போம் என்று சொல்லுப்பா என்றார் அவனோ வேறு ஒன்றும் இல்லை ஒரு நிமிடம் கூட விரையம் (வேஸ்ட்) செய்வது எனக்கு பிடிக்காது எனவே எனக்கு தொடர்ந்து வேலை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்று சொல்ல கூடாது. புரிந்ததா என்று மிரட்டும் தன்மையில் கேட்க இவருக்கு உள்ளுக்குள் ஒரு பயம் ஆனாலும் சம்பளம் இல்லாத வேலை காரன் கிடைத்துள்ளது மற்றொன்று தொடர்ந்து வேலை கொடுப்பது இரண்டுக்கும் ஆசை ஆகவே சரி என்று ஒப்புக்கொண்டார். உடனே அந்த நபர் எனது கோரிக்கையை மறந்தாலும் அல்லது அதுபோல செய்யாமல் விட்டு விட்டாலும் உடனே உங்களை நான் கொன்று விடுவேன் என்றான். அவருக்கு மேலும் பயம் சூழ ஏன்டா நான் பாட்டுக்கு செவேனேனுதானே என் வேலையை பார்த்துக்கொண்டே இருந்தேன் உதவி செய்ய வர மாதிரி ஆரம்பத்தில் இருந்தே பேசி விட்டு கடைசியாக இப்படி ஒரு குண்ட தூக்கி தலையில் போட்டா என்னா செய்வது. ஒப்புக்கொண்ட பிறகு பின் வாங்குவது ஆண் மகனுக்கு அழகில்லை என்று நினைத்துக் கொண்டே சரி என்று சொல்லிவிட்டு அவனுக்கு எப்படி எந்த வேலையை அடுத்து அடுத்து கொடுப்பது என்று யோசிப்பதே இவருக்கு ஒரு பெரிய வேலையாக மாறியது ஏன் என்றால் கண் மூடி கண் திறப்பதற்குள் அந்த வேலையை முடித்து விட்டு அடுத்த வேலை என்ன என்று கேட்பது அவனுக்கு வழக்கம் ஆனது அதனால் இவர் மிகவும் கஷ்டப்பட்டார் அவனை வைத்து ஒருவகையில் இவர் ஒரு ஆளானது ஒரு பக்கம் இருந்தாலும் அதை நினைத்து மகிழ்ச்சி அடைய முடியாமல் இவருக்கு உயிர் பயம் இருந்து கொண்டு இருக்க அந்த சமயத்தில் இவருக்கு ஒரு யோசனை தோன்றியது அதன் படி ஒரு குருவை சந்தித்து அதற்கு முடிவும் கண்டார். அதாவது அவரது வீட்டின் வாசலில் மிகவும் உயரமான மற்றும் வழவழப்பான ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்தார் அதன் உச்சியில் விலை உயர்ந்த ஒரு
வைர த்தை பதித்து வைத்தார். அந்த உதவிக்கு வந்த நபரை அழைத்து அப்பா அன்றாடம் நடக்கும் பணிகளை எல்லாம் நீ தினமும் முடித்து விட்டு நீஅடுத்த வேலை சொல்லும் வரை இந்த இரும்பு கம்பத்தின் மேலே உள்ள அந்த வைரத்தை கீழே இருந்து ஏறி சென்று அதை எடுத்து வந்து தரவேண்டும் என்று கட்டளை யிட்டான் அவனுக்கு இது என்ன பிரமாதம் ஒரு நொடியில் செய்து விடுகிறேன் பாருங்கள் என்று சொல்லி ஏற ஆரம்பிக்கும் போது இவருக்கு மீண்டும் பயம் எங்கே இவன் இதையும் கண் இமைப்பதற்குள் செய்து விடுவானோ என்று மாறாக அவனால் முடியவில்லை காரணம் ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் வழுக்கி கொண்டு வந்து கீழே விழுந்தான் அப்போது தான் இந்த உழைப்பாளிக்கு அப்பாடா என்று பெரும் மூச்சு விட்டு அமர்ந்தார். அது போல தான் நாமும் பல சமயங்களில் தவிக்கிறோம் மனம் என்ற இருள் சூழ்ந்த இடத்தில் ஒளியாக வீற்றிருக்கும் இறைவனை நினைத்தால் அனைத்திலும் மகிழ்ச்சியை மன அமைதியை காண முற்படுவோம் இரும்பு தூண் போன்றவை தான் நமது மனம் அதன் மேல் உள்ள வைரம்
போன்ற இறைவனின் அருளை மன அமைதி மற்றும் ஒரு நிலை பாட்டின் மூலம் பெற்று இன்புற்று வாழ
வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் உயர்க வளமுடன்
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ் P. S. Raj 7558156423