சுக்கிரன் கெட்டால் திருமண வாழ்க்கை பாதிக்குமா?
- ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு விட்டால் மண வாழ்க்கை பாதித்து விடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள். இல்லற சுகமும் இருக்காது என்றும் நினைக்கின்றனர்.
- உண்மையில், சுக்கிரன் கெட்டாலும் ஏழாம் பாவமும், ஏழாமதிபதியும் சுப கிரகமாகி வலிமையுடன் இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். இல்லற சுகமும் இனிக்கும் என்றே சொல்லலாம்.
- சுக்கிரன் நீசமாகி, எட்டில் மறைந்து, ராகு, சனியுடன் சேர்ந்து மொத்த பலத்தையும் இழந்து கெட்டு விட்டார்.
- எனினும் ஏழாம் பாவமான வீட்டில் பலமுடன் இருக்கும் கிரகம் நல்லதன்மையை பெற்றாலும்
- குருவால் பார்க்கப் பட்டாலும்
- மேலும் பவுர்ணமி சந்திரன் அந்த ஏழாம் இடத்தை பார்ப்பதும் வலுப்படுத்துகிறது. மேலும் ஏழாமதிபதி ஆட்சி பலம் பெற்று,சுப கிரகத்தால் பார்க்கப்பட்டால் மேலும் வலிமை பெறுகிறார்.
- எனவே, ஜாதகரின் திருமண வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். இல்லற சுகமும் இனிதே கிடைக்கும்.
- அவரின் திதி சூனியம் ஏழாம் இடத்தில் அல்லது ஏழாம் அதிபதி திதி சூன்ய ராசியில் சென்று அடை பட்டாலும் அல்லது
- முடக்கு ராசியாக ஏழாம் இடம் வந்தாலும்அல்லது ஏழாம் அதிபதி முடக்கு ராசியில் சென்று அடை பட்டாலும் அவ்வளவு சிறப்பாக இல்லற வாழ்க்கை அமைவது இல்லை.
- அதே சமயம் மிதுனத்தில் செவ்வாய் நின்றாலும் சிம்மத்திலசுக்கிரன் நின்றாலும் இல்லற வாழ்க்கை நிம்மதி இல்லாமலும் எந்திரமயமான வாழ்க்கை அமைந்துவிடும்.
- அதேபோல் சுக்கிரன் நின்ற நட்சத்திர சாரத்தை பொருத்தும் இவர்களின் அந்நிய உன்னியம் அமையும்.
- ஆகவே சிறப்புற்று இனிப்பான இல்லறம் அமைவதும்.
- சீர் பட்டு வெளியே சொல்ல முடியாது சிரமமாக வாழ்வதும் அவர் அவர் முன் ஜென்ம கர்மா வே ஆகும்.
எனவே இப்போது நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப நல்ல இல்லறம் அமைத்து கொள்ள முயற்சிப்போம்
வாழ்க நலமுடன் !!
உயர்க வளமுடன் !!!
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்
ராக்போர்ட் ராஜ் P. S.
B. Lit, MA-Astro
7558156423