இறந்தபின் வருந்தி என்ன பயன்?

ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார். துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது. எல்லோர் முகத்திலும் வருத்தம் ,கண்ணீர். ஆனால் ஞானியோ சர்வசாதாரணமாக! உட்காந்து ஏதோ பாடலை முனுமுனுத்துக்கொண்டிருந்தார்.. வந்தவர்களுக்கு அதிர்ச்சி. ஒருவன் துணிந்து கேட்டான்,

”குருவே, நீங்களே இப்படி செய்யலாமா? என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது, நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?

”ஞானி சொன்னார்,”பிறப்பில் சிரிக்கவோ. இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது? பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. அது இயற்கை நியதி.

என் மனைவிக்கு முன்பு உடலோ, உயிரோ இல்லை. பிறகு உயிரும் உடலும் வந்தன. இப்போது இரண்டும் போய்விட்டன. இடையில் வந்தவை இடையில் போயின இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?”

ஆனால் சமூகத்தில் பலர் மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகவே அழுது புலம்பி நடிக்கிறார்கள். உயிருடன் இருக்கும் போது மனைவி பிள்ளைகள் தந்தை தாய் போன்றோரை நன்கு கவனிக்க மாட்டார்கள்.. ஆனால் இறந்ததும் ஏதோ அழுது பாசாங்கு செய்வார்கள்…

உங்களுக்கு அன்பு இரக்கம் இருக்குமானால் உயிருடன் இருக்கும்போது அதனைவெளிக்காட்டுங்கள்.
இறந்தபின் அல்ல..மாறாக உயிருடன் இருக்கும் போதே நமது உறவுகளிடன் அதாவது
கணவன்_ மனைவி
பிள்ளைகள் – பெற்றோர்
என்று எந்த உறவாக இருந்தாலும் அவர்களிடம் உண்மையாக இருக்க முதலில் முயற்சி அதன் பிறகு அதை செயல் நடை படுத்துவது என்று ஆரம்பித்தாலே அனைத்தும் அருமையாக அற்புதமாக இறைவனின் அருளால் நிறைவாக அமையும் அமையட்டும்

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன்

வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்ட் ராஜ் P.S
7558156423
திருச்சி.