ஆறுசுவைகளும் அதினால் ஒரு மனிதனின் ஆயுள் பலமும் !!!

இந்த ஆறு சுவைகளும் எதில் எதில் உண்டு என்று தெரியுமா?

தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும்  என்பது நம் சித்தர்களின் ஆசி !

ஆறுசுவைகள் :

🍇🍈🍉🍊🍋🍓🍐🍏

இனிப்பு  sweet    

புளிப்பு  sour

உவர்ப்பு salt

கார்ப்பு pungent

கசப்பு  bitter

துவர்ப்பு astringent

சுவைகளும் அதன் பயன்களும் :

1 .  இனிப்பு  – தசையை வளர்க்கும்

2 .  புளிப்பு – தேவையான கொழுப்பை தரும்

3 .  உவர்ப்பு  –  தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும்

4 .  கார்ப்பு  –  எலும்புகளை வலுவாக்கும்

5 .  கசப்பு  –  நரம்புகளை வலுபடுத்தும்

6 .  துவர்ப்பு  –  இரத்தம் சுத்தம் செய்யும்

உணவுகளும் அதன் சுவைகளும்

🥑🍆🥔🥒🌽🍅🍐🥜

1 .  இனிப்பு  உணவுகள் –

      கரும்பு , காரட் , பீட்ரூட் , அரிசி , வெல்லம் , கோதுமை பரங்கிகாய்

2 .  புளிப்பு உணவுகள் –

      எலுமிச்சை , தக்காளி ,புளி, மாங்காய் , தயிர் , மோர் , நார்த்தங்காய்

3 .  உவர்ப்பு  உணவுகள் –

      வாழைத்தண்டு , பூசணி , முள்ளங்கி , சுரக்காய் , பீக்கங்காய்

4 .  கார்ப்பு  உணவுகள் –

      மிளகு, கடுகு , மஞ்சள் , மிளகாய் , வெங்காயம் , பூண்டு

 5 .  கசப்பு   உணவுகள் –

      பாகற்காய் , சுண்டக்காய் , கத்திரிக்காய், வெந்தியம் , எள் , வேப்பம்பூ

 6 .  துவர்ப்பு   உணவுகள் –

       மாதுளை , வாழைக்காய் , மாவடு , நெல்லிக்காய் , அத்திக்காய் , அவரை

உணவின் நேரமும் அதன் அளவும் (முறை) :

 எப்போதும் உணவை உண்ணும் போது இதை கவணத்தில் கொள்ளவேண்டும்

உணவு   – அரை வயிறு (பங்கு)

நீர்  –            கால் வயிறு (பங்கு)

காலி  –      கால் வயிறு (பங்கு)

அதை போல ஒரு நாளைக்கு இரு வேலைதான் உண்ண வேண்டும் கீழ் வருமாறு

காலை 9 – 10 am      மாலை 7 – 8 pm

முடியாத பட்சத்தில் மூன்று வேலை உண்ணலாம் கீழ் வருமாறு

காலை   7 – 8  am          மதியம்  12  – 1 pm      மாலை 7 – 8 pm

 தண்ணீரை மென்று தின்னவேண்டும்*

அதாவது மெதுவாக ரசித்து ருசித்து  துளி துளியாக பருக வேண்டும்**நமது உமிழ்நீர் உடன் சேர்த்து பருக அது நமக்கு மருத்துவ குணம் கொண்ட தாக மாறும் தன்மை கொண்டது.

விலங்குகள் தனது புண்களை நக்கியே ஆற்றும் அல்லது குணமாகும் தன்மை கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் நாம் அனைவரும் அதை நமது கண்களாலேயே பார்த்தும் இருப்போம் அது போல நமக்கும் நமது உமிழ்நீர் மருத்துவ குணம் கொண்டது.

இரவு முழுவதும் நமது வாயில் அரிசியை அடக்கி வைத்திருந்து விட்டு காலையில் வெளியே துப்பும் போது கோழி அதை திண்ணால் (உண்டால்)

இறந்து விடும் அந்த அளவுக்கு நமது உமிழ்நீர்க்கு பவர் உண்டு.

அதை நாம் பயன்படுத்தும் விதத்தை பொருத்தது.

உணவை குடிக்க வேண்டும்

 அதாவது உணவு வாயில் இருக்கும் போதே கூழாக மென்று பின்பு மெதுவாய் ரசித்து ருசித்து  விழுங்க வேண்டும்.

எந்த வித கோபதாபத்தையும் சாப்பிடும் போது குறைத்து கொண்டு அல்லது அதைபற்றி நினைக்காமல் பொருமையாக நிதானமாக உணவருந்த வேண்டும்.

நமத பெரியவர்கள் பிள்ளைகள் வசம் உன் கோவத்தை சாப்பாட்ல காட்டாத என்று சொல்லி கேட்டு இருப்போம் அல்லவா

என்ன காரணம் நமது உடலில் உள்ள சுரப்பிகள் நமது எண்ணங்களுக்கு ஏற்றார் போல ஹார்மோன் சுரப்பு மாறுபடும் என்பதால் தான் கோபத்துடன் உணவருந்த கூடாது என்று சொல்லி வைத்துள்ளனர் அதை போலவே லபக்கு டபக்கு என்று மெல்லாமல் விழுங்கினாள் உணவு குழாயில் அடைப்பு ஏற்பட்டு விடும் அதனால் உடல் உபாதைகள் ஏற்படும். என்ற காரணமும் ஒன்றாகும். அதனால் தான்

 நொறுங்க தின்றால் நூறு வயது* இதனால் தானோ!!!!

வேதமித்ரா ஜோதிட மையம்

ராக்போர்ட் ராஜ்.P.S

B.Lit, MA – Astro

7558156423

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏