கண்ணாடி தத்துவம்.
ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது..!!? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! ‘ஒருவேளை மாயாஜாலக் கண்ணாடியோ..!!?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை…
பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில் இருப்பது கண்ணாடி தானே..?”
“ஆமாம்..!”
“அதில் என்ன தெரிகிறது..?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்..!”
“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது..?”
“ஆமாம்..!”
“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..?”
பெரியவர் புன்னகைத்தார்.
“சாதாரணக் கண்ணாடி தான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய..!”
வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ் P. S BLit, MA – Astro
7558156423