தள்ளி விட்டவனையும் தட்டி கொடுத்த வரையும் மறக்க கூடாது

ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்!
வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,
அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்!
போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்… இப்படியாக!
அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறான்.
“இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவனுக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!”
அவன் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது…
“அது மட்டுமில்லை… கூடவே ஒரு 15 மில்லியன் டாலர்கள் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!”
“சரி… உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள்! என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்” என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்!
சொல்லி முடித்தவுடன்… மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது… அந்தப் பணக்காரனின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து,
டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது!
அவ்வளவுதான்! அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்!
“இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம்! எவன் இதில் ஜெயிக்கிறான் னு?” “நிச்சயமா எவனாலும், முடியாது!” என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்!
அப்பொழுது,…
திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம்!
அத்தனை பெரும் மூச்சுக்கூட விட மறந்து,..
உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்!
அந்த இளைஞன்,.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி விலகி, வேகமாய் நீந்தி,
அடுத்த கரையில் விருட்டென ஏறி,
வெடவெடவென நின்றான்!
பணக்காரனால், தன் கண்களை நம்பமுடியவில்லை!
“பிரமாதம்.! நான் தர்றதா சொன்ன விஷயங்களுக்கும் மேல,.. உனக்கு என்ன வேணுமோ கேளு!
நான் தர்றேன்! எதுவாக இருந்தாலும்!”
அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை!
வாய் தந்தியடித்தது, மிரட்சியில்!
கண்கள் அரண்டு போய் இருந்தது!
பின், ஒருவித வெறியுடன்…
“அதெல்லாம் இருக்கட்டும்…
என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்!!!
🐊 நீதி-1 :
முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை… உன் திறமை என்னவென்று,
உனக்கே தெரியாது! (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான்,.. என்பதும் புரியவரும்!!!)
🐊 நீதி-2 :
உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள்…
உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே! (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே!)
🐊 நீதி-3 :
சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,
நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்!
🐊 நீதி-4 :
சிலருக்கு,.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது!
வாழ்க நலமுடன் உயர்க வளமுடன்

வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ் P.S
75581 56423

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *