“நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்சது உன்னை விட்டு போகாது “.

சொந்தகாரங்க வீட்டு கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வரும் பொது இரவு 1 மணி ஆயிருச்சு , நீண்ட தூரம் பஸ் பயணம் செஞ்சு வந்ததால் அனைவரும் வந்தவுடன் பாயை விரித்து படுத்து விட்டோம் , மறு நாள் ஞாயிற்று கிழமை என்றதால் ரொம்ப நேரம் தூங்கலாம் என்ற என் எண்ணம் ,காலையில் “அய்யயோ ” என்ற கூச்சலுடன் தகர்ந்தது ,

முழுச்சு பார்த்த எங்க அம்மா ,”இங்கேய தானே வச்சேன் காணுமே ,எங்கேய போச்சுன்னு தெரியேல்லை”னு புலம்பி அழுது கொண்டு இருந்தாங்க , அப்பா எந்திரிச்சு என்னமா என்ன ஆச்சு என் அழுகிற ?கேட்க ,நைட் இங்கே தான் என் மோதிரத்தை கழட்டி வைச்சேன் அத காணுங்க னு கூற , பதிலுக்கு எங்க அப்பாவும் தேட ஆரம்பிச்சிட்டாரு , தூங்கிட்டு இருந்த என்னை உதச்சு எந்திரிடானு என் தம்பி உசுப்ப நானும் எந்திரிச்சு தேட ஆரம்பித்தேன் , எங்க வீடு அப்போ ஒரே ஒரு அறை கொண்ட வீடு தான் , ஒரு தடுப்பு சுவர் அங்கிட்டு அடுப்படி ,ஹால் ரூம் ,bed room எல்லாம் ஒன்னு தான் , மூலையில் ஒரு பீரோல் அது பக்கத்திலே ஒரு stand அந்த ஸ்டாண்டில் சாமி படங்கள் மோதிரத்தையும் அந்த ஸ்டாண்டில் தான் கழட்டி வச்சுருக்கு எங்க அம்மா , தேடி தேடி பார்த்தும் எங்கேயும் கிடைக்கவில்லை ,

அம்மா ரொம்ப அழ ,அப்பாவும் ” பரவாயில்லை விடுமா , வேற மோதிரம் வாங்கிக்கலாம்”னு அம்மாவே தேத்த ” சமாதானம் ஆகவில்லை எங்க அம்மா ,அங்கே இருந்த சாமி படத்தை பார்த்து ” என்ன பாவம் செஞ்சோம் ,ஏன் எப்போ பார்த்தாலும் இல்லாதாவைங்க கிட்டேயே புடுங்கிற “னு ஆவேச பட்டு பேச ஆரம்பிச்சிட்டாங்க, ஆவேச படுறதுலயும் ஒரு நியாயம் இருந்துச்சு ஏன்னா எங்க அம்மாகிட்டே நகைன்னு சொல்லிக்கே அது ஒன்னு தான் இருந்துச்சு .

அன்று எங்க வீடு எழவு வீடு மாதிரி ஆயிருச்சு , வீட்டிலே சமைக்கலே யாரும் சாப்பிடவும் இல்லை ,எங்க அம்மா ஒரு மூலையில் ஒக்கார்ந்து அழ, எங்க அப்பா கவலையில் வீட்டுக்கு முன்னாடி இருக்கும் பூவரசன் மரத்தடி உக்கார்ந்து இருந்தார் , நானும் என் தம்பியும் கல்யாண வீட்டில் இருந்து கொண்டு வந்த அதரசத்தையும் ,முறுக்கையும் எடுத்து pant பையில் வச்சிக்கிட்டு வீட்டுக்கு பின்னாடி இருக்கும் மரத்தடி உக்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க , பக்கத்து வீடு அம்மா எங்களை பார்த்து “என்னடா இங்கே உக்கார்ந்து இருக்கிங்க சாப்பிடலையா “னு கேக்க என் தம்பியும் ” எங்க அம்மா மோதிரம் தொலைஞ்சு போச்சு அதுனாலே எங்க வீட்டில இன்னைக்கு சமைக்கலே” னு சொல்ல,அந்த பெரியம்மாவும் துக்கம் விசாரிக்க வந்துட்டாங்க ,வந்து என்ன ஜானகி என்ன ஆச்சுன்னு கேட்க ,மறுபடியும் அழ ஆரம்பிச்சுட்டாங்க எங்க அம்மா ,அந்த பெரியம்மாவும் நீ கவலை படாதே ஜானகி சாமி நம்மளை கை விடாது , வா போயி கோடாங்கி (குறி பார்க்கிறது) பார்த்துட்டு வந்துருவோம் னு கூட்டிகிட்டு போக , அங்கே அவனும் “பொருள் வீட்டுக்குள்ள தான் இருக்கு ,வெளியே போகலே “னு சொல்ல நம்பிக்கையுடன் திரும்ப வந்த எங்க அம்மா மறுபடியும் நல்ல தேட சொல்ல ,தேடி பார்த்தும் கிடைக்கலே, மறுபடியும் மயான அமைதி ,

அப்போ எங்க வீட்டில் எலி தொல்லை அதிகமா இருந்திச்சு,அதை வச்சு என் தம்பி அப்பாகிட்ட ,”அப்பா எலி எடுத்துக்கிட்டு போயிருக்குமோ” னு சொல்ல ,எங்க அப்பாவுக்கு பொறி தட்டச்சு ,மூலையில் இருந்த பிரோவை நகட்டி பார்த்தா அங்கே ஒரு பொந்து இருந்தது ,அதுக்குள்ள light அடிச்சு பார்த்த ஒன்னும் தெரியலே ,ஒரு கடப்பாரையை எடுத்து வந்து அந்த பொந்தை கொஞ்ச பெரிசா ஒடைச்சு உள்ளே கையை விட்டு பார்த்தா ,அங்கே இருக்குங்க அந்த மோதிரம் ,அதை பார்த்தவுடன் என் தம்பி ரெண்டு கையும் தூக்கி கொண்டு குதிச்சான் பாருங்க ஏதோ ஒரு கோடி ரூபாய் லாட்டரி விழுந்த மாதிரி “அம்மா கிடைச்சிருச்சு ,கிடைச்சிருச்சு” னு ஓடி போயி அம்மாகிட்டே சொல்ல ,பின்னாடியே எங்க அப்பாவும் அந்த மோதிரத்தை கொண்டு வந்து எங்க அம்மாகிட்டே கொடுக்க, வந்துச்சு பாருங்க எங்க அம்மா மூஞ்சிலே சந்தோசம் ,அப்படி ஒரு சந்தோஷத்தை அம்மா முகத்தில் ஒரு நாளும் பார்த்தது இல்லை , அப்போ தான் எங்க அப்பா சொன்னாரு ” நம்ம கஷ்டப்பட்டு சம்பாரிச்சது நம்மளை விட்டு போகுமா,போகாது “. …

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் 🙏🍇🍎🍇
வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்டு ராஜ் P.S
7558156423

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *