ஒரு பிச்சைக்காரன் தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டுசென்றான். ஒரு வீட்டு வாயிலில்‘ அம்மா தாயே எதானாச்சிம் போடுங்க. வவுறு பசிக்குது’ஒங்கிக் கத்தினான்.அந்த அம்மாள் ஒய்யார நடை நடந்து வெளியில் வந்தாள். ஆகபிச்சைக்காரனுக்கு அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை என்றுஉறுதியாகிவிட்டது.‘ அம்மா தாயே உங்க ஆத்தா அப்பன சொர்க்கத்துல பாத்தேன்.ரொம்ப செருமம்.அங்க பச்ச அரிசி சோறு போடுறது இல்லயாம். கட்டிக்கக் கூடஒரு நல்ல துணிமணி கொடுக்கமாட்டென்றாங்கன்னு சொல்லிசொல்லி அழுதாங்க. ரொம்ப பரிதாபமா இரிந்திச்சிஎதானா நீ குடுத்தா நா கொண்டு போயி அங்க அவாளிடத்திலேசேத்தும் பூடுவேன் அப்பறம் உன் இஷ்டம் தாயி’’அப்பா அம்மா கேட்கிறார்கள். அதுவும் புருஷன் வேறு வீட்டில்இல்லாத நல்ல சமயம்.இதைவிட ஒரு பெண்ணுக்கு என்ன பெரிய பேறு வாழ்க்கையில்கிடைத்துவிடப்போகிறது, எண்ணிய அவள் ஒரு பட்டு வேட்டி,பட்டுப்புடவை பச்ச அரிசி ஒரு பை எனக் கணிசமாய்பிச்சைக்காரனிடம் கொடுத்து‘ பத்திரமா அப்பா அம்மாகிட்ட நீ சேத்துடு என் சாமி’’ என்றுகெஞ்சி முடித்தாள்.பிச்சைக்காரன் அவள் கொடுத்தது எல்லாம் சுருட்டிக்கொண்டுஇடத்தைக்காலி செய்தான்அவன் அப்படிப்போகவும் அவள் புருசன் வீடு திரும்பவும் சரியாகஇருந்தது.‘யார் வந்தது’கீழே அரிசி இத்யாதிகள் எல்லாம் சிந்தி இருந்தது.அவன்தான் கேட்டான்.‘ அதாங்க என் ஆயும் அப்பனும் சொர்க்கத்துல கொல பட்டினிகெடக்குராங்களாம். சொர்க்கத்துலேந்து வந்த ஒரு பிச்சைக்காரன்தான் என்கிட்ட சேதி சொன்னாரு. அவங்களுக்கு கட்டிக்கத்துணிகூடம் சரியா இல்லயாம். அதான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்அனுப்பி வச்சேன்’சொல்லி நிறுத்தினாள்.‘ எங்க அவன்’ கணவன் சீறினான்.‘ இந்நேரம் தோ அந்த தெரு தாண்டி இருப்பான்’.தான் வந்த அதே குதிரையில் ஏறிக்கொண்டு பிச்சைக்காரனைஅவன் துறத்திக்கொண்டு சென்றான்பிச்சைக்காரன் இது விஷயம் எப்படியோ தெரிந்துகொண்டவனாய்வழியில் நின்றிருந்த ஒரு மாமரத்தின் மீதுஏறி உச்சியில் அமர்ந்து கொண்டான்பிச்சைக்காரன் மாமரத்தில் இருப்பது அறிந்த அவன் குதிரையைமாமரத்தின் கீழ் நிறுத்திவிட்டு மரத்தில் பாய்ந்து பாய்ந்து ஏறினான்.பிச்சைக்காரனும் தாவித்தாவி க்கடைசியாய் பொத்தென்று குதிரைமுதுகின்மீது படார் எனக் குதித்து குதிரையோடு ஒடி மறைந்தான்.கீழே இறங்கிய அவனுக்கு இப்போது அந்தக் குதிரையும் போய்த்தொலைந்தது..பொடி நடையாய் சோர்ந்துபோய் அவன் வீட்டுக்குத்திரும்பினான்.‘ எங்க நம்மக் குதிரையைக்காணும்’ மனைவி ஆரம்பித்தாள்‘ நல்லக்கதை.யா இருக்குடி நீ கேக்குறது. அங்க சொர்க்கத்துலஎம்மாமனுக்கும் மாமிக்கும் எங்க போவுனுன்னாலும் நடயா நடந்துகாலு வீங்கிக் கொப்புளமாக்கெடக்குதுன்னுல்ல அந்த பிச்சக்காரன்சொல்லுறான். அதான் பெரியவங்க குதிரையிலயே போவட்டும்வரட்டும்னு நானேதான் நம்ம குதிரையை குடுத்துவுட்டேன்’அழகாய்ச்சொல்லிமுடித்தான்.‘ அய்யா தருமத்தொரயாச்சே சும்மாவா நானு முந்தி விரிச்சன்’அவள் சொல்லி முடித்தாள்.

vedda copy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *