மிகவும் பொருள் பொதிந்த பாடல் வரிகள்.
#”நைட் லேம்ப்” நிறைய பேர் தமது படுக்கை அறைகளில் தூங்கும் போது பயன்படுத்துவது சாதாரண விஷயம். நடு இரவில் எழுந்து குடிநீர் அருந்த மற்றும் சிறுநீர் கழிக்க கழிவறை செல்ல வசதிக்காக.
#ஆனால் இந்த இரவில் படுக்கை அறை விளக்கு பயன்பாட்டு முறை, ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
#அமெரிக்க வடமேற்கு பல்கலைக்கழகம் (North Western University of The US ) இது சம்பந்தமான ஒரு விரிவான ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
#இரவில் படுக்கை அறையில் மிகவும் மங்கலான வெளிச்சத்தில் விளக்கு எரிய விட்டாலும் அதனால் தூங்கும் போது, இதய இரத்த ஓட்டம் மற்றும் இரத்தக் குழாய்களில் பாதிப்பும் சேதமும் (cardiovascular function) அதனால் இதய நோயும், ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது
#மேலும் இவ்வாறு தூங்கும் இரவின் அடுத்த நாள் “இன்சுலின் எதிர்ப்பும்” (insulin resistance) ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
# “இன்சுலின் எதிர்ப்பு” ஏற்படும் போது உடல் பருமன், சர்க்கரை ஒழுங்கீனம், மாதவிடாய் கோளாறுகள், குழந்தை இன்மை குறைபாடுகள் போன்ற சில பிரச்சினைகளும் ஏற்படக் கூடும்.
# இந்த ஆராய்ச்சியில் 100 Lux அளவு ஒளி உமிழும் விளக்கு (moderate lighting) மற்றும் 3 Lux அளவு வெளிச்சம் உமிழும் (dim lighting) கொண்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
# இரவில் இருண்ட அறையில் தூங்கும் நபர்களும் கண்காணிக்கப் பட்டனர்.
#எந்த ஒரு வெளிச்சமே இல்லாமல் இருட்டில் தூங்கும் நபர்களின் இதயத் துடிப்பை விட, மங்கலான வெளிச்சத்தில் தூங்கும் நபர்களின் இதயத் துடிப்பு இரவு முழுவதும் அதிகமாக இருந்தது (elevated heart rate throughout the night) தெரிய வந்தது.
#இவர்களுக்கு முன்பே சொன்ன “இன்சுலின் எதிர்ப்பு” (insulin resistance) அடுத்த நாள் காலை அதிகரித்து இருப்பது தெரிந்தது.
#பகலில் ஒளியின் அவசியம் தேவை தான். ஆனால் இரவில் தூங்கும் போது விளக்கு வெளிச்சத்தை முற்றிலும் தவிர்ப்பது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது
“#”விளக்க எரிய விட்டு தூங்கினால் தான் கொளரவம் ஆச்சு””
என்ற இன்னொரு பழைய பாடல் வரிகளும் நினைவுக்கு வந்தது
வாழ்க வளமுடன் உயர்க நலமுடன் 🙏
வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்ட் ராஜ் p.s
திருச்சிராப்பள்ளி
7558156423