ராகு கேது பற்றிய ஒரு ஜோதிட விளக்கமான நீண்ட பதிவு.அதை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்♋ஜோதிட உலகத்தில் இருக்கும் மிக மிக முக்கியமான கிரங்களாகிய “ராகு-கேது” பகவான்கள் பற்றிய அறிவியல் சார்ந்தும் ஆன்மீகம் சார்ந்தும் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.♦பாரம்பரிய ஜோதிடத்திலும் வேத ஜோதிடத்தில் ராகு கேது பற்றிய சில முரண்பட்ட தகவல்களும் சில மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன இந்த பதிவில் நாம் ராகு கேது பற்றிய உண்மையான சிலவிஷயங்களைப் பார்ப்போம்.♦இந்தப் பிரபஞ்சத்தை மற்றும் இந்த ஜகத்தை ஆளக்கூடிய சக்திகள் படைத்தவர்கள் ராகு-கேது பகவான்கள் மட்டும்தான்.♦ராகு-கேது பகவான்கள் நிழல் கிரகங்கள் கிடையாது அது நிழல் கதிர்கள் அதாவது சாயா கிரகங்கள்.♦பரி பூரண சூரியகிரகணம் ராகு பரி பூரண சந்திரகிரகணம் கேது.பரி பூரண அமாவாசை விழாவாகும் பரி பூரண பௌர்ணமி கேது.♦பரிபூரண அம்மாவாசை பரி பூரண பௌர்ணமி எல்லா மாதத்திலும் வராது ராகு கேது பெயர்ச்சிக்கு முன்தினம் வரும் அமாவாசை தான் பரிபூரண அம்மாவாசையும் பரி பூரண பௌர்ணமி ஆகும்.♦ராகு பகவான் கரு நாகப்பாம்பு,கேது பகவான் செம்பாம்பு, செம் பாம்பே உன்னை சிரம் தாழ்த்தி பணிகிறேன் என்று கேதுவிற்கு ஒரு ஸ்லோகமே உள்ளது.♦சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் தான் ராகுவும் கேதுவும்♦ஒரு சூரிய கிரகணதிற்கும், சந்திர கிரகணதிற்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே.♦அந்த ஒன்றரை வருட ராகு கேது பெயர்ச்சி காலம் வேறொன்றும் கிடையாது ஒரு சூரிய கிரகணத்திற்கும் அடுத்த சூரிய கிரகணத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே,♦அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஒரு மாதத்தை எப்படி கணக்கில் எடுத்து கொண்டார்கள் என்றால்,ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ஒரு மாதமாக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள்.♦ஒலியும் ஒளியும் தான் ராகுவும் கேதுவும்.♦ராகு கேது வேறொன்றும் கிடையாது இடியும்,மின்னலும் தான் ராகு கேது.♦ராகு தோஷம் உடையவர்களை தான் இடியும் மின்னலும் தாக்கும்♦இடியும் மின்னலும் ஒரு சேர்ந்து வந்தால் இந்த பூமியில் ஒரு இடத்தில் விழுந்து இருக்கிறது என்று அர்த்தம்.♦ராகு கேது நம்முடைய விந்தணுக்கள் ஆகும் உண்மையிலேயே விந்தணுக்களின் உருவம் தலை மற்றும் வால் சேர்ந்த உருவமாகும்.தலை – ராகு,வால் – கேது இந்த இரண்டும் சேர்ந்த கலவை தான் நம்முடைய விந்தனுக்கள்.♦ராகு வைரஸை பரப்பும் கூடிய வைரஸ்,மிருதன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல,வைரஸை பரப்ப கூடிய வைரஸ்.♦கேது வைரஸை அழிக்க கூடிய வைரஸ் அதாவது நாயகன் சினிமாவில் வரும் கமலஹாசன் போல Negativeஐ அழிக்கக்கூடிய Nagative.♦ராகு அமானுஷ்ய விஷயங்களுக்கு அதிபதி பில்லி ,சூனியம், ஏவல் மாந்திரீகம், செய்வினை,போன்ற விஷயங்கள் ராகு பகவானின் காரகத்துவம்.♦ஏன் பில்லி,சூனியம் ,ஏவல்,மாந்திரீகம், செய்வினை செய்பவர்கள் எல்லாம் அம்மாவாசையில் செய்கிறார்கள் ஏனென்றால் அம்மாவாசை தான் ராகு.♦ஏனென்றால் அம்மாவாசையில் தான் பூமிக்கு ராகுவின் கதிர்கள் வந்து விழும்.அதனால் தான் பில்லி சூனியம் ஏவல் செய்வினை செய்வார்கள் ராகுவின் நாளிலேயே செய்கிறார்கள்.♦பரிபூரண அம்மாவாசையில் தான் திதி கொடுப்பது செய்வினை செய்வது பலிகொடுப்பது.போன்றவைகளை செய்வார்கள்.♦ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி.உண்மையிலேயே பத்ரகாளிக்கு தான் மனிதர்களின் நர பலி கொடுப்பார்கள்.அதனால் தான் மனிதர்களை நர பலி கொடுப்பதற்கு பத்ரகாளிக்கு பரிபூரண அமாவாசை நாளில் பலி கொடுக்கிறார்கள்ஏனென்றால் அம்மாவாசை தான் ராகு.♦கேது ஆன்மீகத்திற்கு காரகத்துவம் ஆன கிரகம் மற்றும் யாகத்திற்கு அதிபதி.அதனால்தான் கோவில்களில் யாகம், ஹோமம் பரிகாரம்,கும்பாபிஷேகம்,விசேஷங்கள் கேதுவின் நட்சத்திர நாட்களில் நடத்துகிறார்கள்.அல்லது கேதுவிற்கு உகந்த நாளில் நடத்துகின்றனர்.♦சூரிய ஒளி 9 கிரகங்கள் மீது பட்டு அதனுடைய reflection அல்லது radiation ஆக தான் பூமிக்கு 9 கிரகங்களின் கதிர்வீச்சு வருகிறது.♦இங்கு இருக்கும் அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் சூரிய ஒளியை base செய்து தான் கட்டப்பட்டிருக்கும்.♦சூரிய ஒளி நவகிரகங்கள் மீது பட்டுதான் கருவறைக்குள் இருக்கும் கடவுளின் விக்கிரகத்தை சென்றடைகிறது.♦சூரிய கிரகணத்தின் போது ராகு சூரியனை விழுங்கும் போது சூரிய ஒளி 9 கிரகத்தின் மீது படாமல் போகிறது.♦இதனால் 9 கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் அந்த கதிர்வீச்சுகள் நிறுத்தப்படுகிறது.♦ஒன்பது கிரகங்கள் தான் இந்த பூமியை கட்டுப்படுத்துகிறது.சூரிய கிரகணம் ஏற்படும் அந்த குறிப்பிட்ட சில நேரங்களில் நமது பூமிக்கும் பிரபஞ்சத்தில் உள்ள இறை சக்திக்கும் தொடர்பு இல்லாமல் போகிறது.♦சூரிய கிரகணம் ஏற்படும் அந்த குறிப்பிட்ட சில நேரத்தில் பூமியில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் அது மேலே உள்ள இறை சக்திக்கு போய் சென்றடையாது.♦அதனால்தான் சூரிய கிரணத் அன்று அனைத்துக் கோயில்களும் மூடப்படுகின்றன.♦சூரியனை ராகு விழுங்கும் போது அந்த நேரத்தில் நமது பூமியில் உள்ள கோயில்களில் இருக்கும் நவகிரகங்கள் மீது சூரிய வெளிச்சம் படாமல் போய்விடுகிறது.♦இதனால் கோயில் இருக்கும் கருவறையிலுள்ள விக்ரகத்திற்கு சக்தி இல்லாமல் போய்விடுகிறது.இதனால்தான் சூரிய கிரகணதன்று அனைத்து கோயில்களும் மூடப்படுகின்றன.♦சூரிய கிரணத் தன்றுதான் இந்த தீய செயல்களை செய்யககூடியமந்திரவாதிகள் ,செய்வினை செய்பவர்கள் ,அசுரர்கள்,நரபலி கொடுப்பதும் ராகு பகவானுக்கு சிறப்பு யாகத்தை செய்வதும் பத்ரகாளி சிறப்பு யாகத்தை செய்வதும் செய்து தங்களின் சக்தியைப் பெருக்கிக்கொள்வார்கள்.♦சூரிய கிரணத் தன்றுதான் ராகுவின் அதிதேவதையான பத்ரகாளிக்கு நரபலி கொடுப்பார்கள்.அப்போது தான் இந்த பூமியில் ராகுவின் சக்தி அதிகமாக இருக்கும்.♦கடவுளுக்கு எதிரான சில விஷயங்களை செய்வதும்.மிகப்பெரிய அசம்பாவித செயல்களைச் செய்வதும்.சூரிய கிரகணதன்று தான் செய்வார்கள்.ஏனென்றால் சூரிய கிரணத்தன்று எந்த கடவுளுக்கும் சக்தி இருக்காது.♦இதனால்தான் அனைத்து கோயில்கள் இருக்கும் கடவுளின் விக்கிரகங்கள் மூடப்படுகின்றன.♦சூரிய கிரகணதன்று தான் இந்த பூமியில் புதிய கொடிய வைரஸ்கள் உருவாகும்.ஏனென்றால் வைரஸ் ராகு.♦சந்திர கிரகணத்தன்று தான் இந்த பூமியில் புதிய உயிரினங்கள் அல்லது உயிர்கள் புதியதாக ஜனனம் எடுக்கும்.♦கேது யாகத்திற்கு அதிபதி ஆன்மீகத்திற்கு காரணமான கிரகம்.அதனால் தான் பௌர்ணமி நாளில் கடவுள்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகளும் யாகங்களும் மூலிகை செடிகள் அல்லது மூலிகை பொருட்கள் பரிக்க செல்வதும் செய்கிறார்கள்.♦பௌர்ணமி நாளில் கேதுவின் கதிர்வீச்சு பூமிக்கு அதிகமாக வந்து விழும். அப்பொழுதுதான் சிறப்பு யாகங்களை நடத்துவார்கள்.♦ராகு நம்முடைய மூதாதையர்கள் அதனால்தான் நம்முடைய மூதாதையர்களுக்கு அமாவாசையில் திதி கொடுக்கிறோம் அமாவாசையே ராகு பகவான் தான்.♦ராகு தீராத ஆசையுடன் இறந்து போன பிரேத ஆத்மாக்கள் அல்லது ஆவிகள் அதனால்தான் அம்மாவாசையில் இரவு நேரத்தில் யாரும் வெளியே வரக்கூடாது என்று சொல்வது.♦நமது உடலில் தீராத ஆசையுடன் உயிர் இருந்தால் அது ராகு.உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அது கேது.♦கேது தான் முக்திக்கு அதிபதி.நம் உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் நமக்கு முக்தியா அல்லது மறுபிறவியா என்பதை சொல்பவரே கேது பகவான் தான்.♦கேது தோஷம் என்று ஒன்று கிடையவே கிடையாது 8 அஷ்ட கர்மங்கள் தான் ஜோதிடத்தில் உள்ளது.♦கேது தோஷம் ஆகிவிட்டால் ஒரு மனிதனுக்கு இறப்பும் கிடையாது பிறப்பும் கிடையாது.♦ராகு தீராத ஆசையை உடையவன் கேது தீராத கடமை உள்ளவன்.ராகு போன ஜென்மத்தில் நமக்கு தீராத ஆசையை எடுத்துச் சொல்லும்.கேது போன ஜென்மத்தில் நிறைவேறாத கடமையை எடுத்து சொல்லும்.♦ராகு பகவானுக்கு வெறும் தலை மட்டும்தான் வெறும் தலை மட்டும் கொண்ட ராகு பகவானுக்கு ஜூனரம் என்பதே கிடையாது எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது.♦ராகு பகவானுக்கு ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்றால் அல்லது அடைய வேண்டுமென்றால் அடுத்தவர்களின் மூலமாகத்தான் அந்த ஆசையை ராகு பகவான் நிறைவேற்றிக் கொள்ளும்.♦அதனால்தான் தீராத ஆசை உடைய ஆவிகள் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அடுத்த வர்களின் உடம்பிற்குள் சென்று தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறது.அந்தத் தீராத ஆசை உடைய ஆவிகள் தான் ராகு பகவான்.♦அதே போன்றுதான் நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ராகு பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ அந்த கிரக காரகத்துவங்களும் அந்த பாவ கிரக காரகத்துவங்கள் இந்த ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது.♦கேது நம் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவ விஷயங்களும் பாவ காரகத்துவ விஷயங்களும் நாம் இந்த ஜென்மத்தில் கடனுக்கு அல்லது கடமைக்கு என்றே செய்வோம்.♦நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன.💐மூலாதாரம்💐சுவாதிஷ்டானம்💐மணிப்பூரகம்💐அனாஹதம்💐விசுக்தி💐ஆக்நீயா💐சகஸ்ராரம்.♦இந்த ஏழு சக்கரங்களும் ராகு கேது உடைய நட்சத்திரங்களாகும்.அதாவது💐மூலாதாரம் மூலம் நட்சத்திரம்.💐சுவாதிஷ்டானம் சுவாதி நச்சத்திரம்.💐மணிப்பூரகம் மகம் நட்சத்திரம்.💐அனாஹதம் சதயம் நட்சத்திரம்.💐விசுக்தி அஸ்வினி நட்சத்திரம்.♦இந்த ஏழு சக்கரங்கள் தான் ஒரு மனிதனை இயக்குகிறது.அப்போது இந்த ஏழு சக்கரங்களே ராகு கேது உடையது.♦இந்தப் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இருக்கும் தொடர்பு அல்லது Connectionஐ ஏற்படுத்துபவர்களே இராகு கேது தான்.♦ஏன் செய்வினை செய்பவர்கள் ஏவல், பில்லி ,சூனியம், மாந்திரீகம் செய்பவர்கள் நமது உச்சந் தலை முடியையும்.கால் நகத்தையும் கேட்கிறார்கள்.♦ஏனென்றால் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை நீக்குவதற்கு அதனால்தான் அமாவாசையில் இது எல்லாம் செய்கிறார்கள்.♦அம்மாவாசை செய்தால் தான் இதையெல்லாம் செய்ய இயலும்.அல்லது பலிக்கும்.♦அதனால்தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே இராகு கேதுவின் கையில் உள்ளது.♦இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களை மூன்று பிரிவுகளாக 1 5 9 திரிகோணங்களாக பிரிக்கின்றனர்.♦அதனால்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களில் முதல் நட்சத்திர மண்டலம் “அஸ்வினி” என்ற கேதுவின் நட்சத்திரத்தில் ஆரம்பிக்கிறது. இரண்டாவது நட்சத்திர மண்டலம்”மகம்”நட்சத்திரத்திலும் மூன்றாவது நட்சத்திர மண்டலம் “மூலம்’ நட்சத்திரத்திலும் அமைகிறது.இந்த மூன்று நட்சத்திர மண்டலங்களின் ஆரம்ப புள்ளிகளே கேதுவின் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்கிறது.🐍இதனால்தான் ஜோதிடத்தில் ராகு கேது பகவானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்ராக்போர்ட் ராஜ்P.S B. Lit, MA-Astroதிருச்சி75581 56423 , 90926 87492
