தினம் ஒரு குட்டிக்கதை :–

அனுபவம்…

ஒரு வயதான பெண்மணி , கொஞ்சம் மாம்பழங்கள் வாங்குவதற்காக, ஒரு பழ வியாபாரியிடம் சென்றார். அந்த பெண்மணிக்கு கண்பார்வை சரியாக இல்லை. அவளுடைய கேட்கும் திறனும் கூட நன்றாக இல்லை. அவள் மிகவும் பலகீனமாக இருந்ததால், மெதுவாகவே நடந்து வந்து கொண்டு இருந்தாள்.

அந்த மாம்பழ வியாபாரி தொலைவிலேயே அவள் வருவதைப் பார்த்து விட்டார். அவர் நினைக்கலானார். “ஓ! இன்று ஒரு நல்ல வேட்டைதான். நான் என்னிடம் இருக்கும் அழுகிப்போன மாம்பழங்களை இந்த வயதான பெண்ணிடம் கட்டி விடுவேன். அவளுக்கு, எந்தவித வித்தியாசத்தையும் காண முடியாது” என்று..

அந்த வயதான பெண்மணி பழவியாபாரியை நெருங்கிய போது, அவர் கூறினார், “இன்றைக்கு மார்க்கெட்டில் இருப்பதிலேயே, இவைதான் புத்தம் புதிய, மிகச் சிறந்தவை. நீங்கள், உங்கள் கண்களை மூடிக் கொண்டே, எந்தப் பழத்தை வேண்டுமானாலும், தெரிவு செய்ய முடியும்”.

ஆனால், அந்த வயதான பெண், சற்று வித்தியாசமான வேண்டுகோளை முன்வைத்தாள். அவள் வியாபாரியிடம் கூறினாள், “எனக்கு மாம்பழங்கள் சட்னி செய்வதற்காக தேவைப் படுகிறது. அதற்காக எனக்கு, கொஞ்சம் அதிகமாக பழுத்த பழங்கள் வேண்டியதாக இருக்கிறது. அவை, சிறிது மென்மையாகவும் இருக்க வேண்டும். எனக்கு கண் பார்வை கொஞ்சம் குறைவு; நீங்கள் அந்த மாதிரியான பழங்களை எனக்காக ஒதுக்கி வைக்க முடியுமா?”

அந்த பழ வியாபாரி, சற்று அதிகப்படியாகவே மகிழ்ச்சி அடைந்தார். ஏனென்றால், இப்படி ஒருபோதும் நடக்காது. அதாவது, யாராவது உன்னிடம் வந்து, கெட்டுப் போன பழங்களை வாங்கிப் போகிறேன் என்று வருவார்களா!

அவர் மிகவும் கவனமாக, அதிகப்படியாக பழுத்த பழங்களைப் பிரித்தெடுத்தார். சிறிது மென்மையான பழங்களை, அவற்றை, வேறு ஒரு தனி குவியலாக ஆக்க செய்தார். அந்த வயதான பெண்ணிடம் கூறினார், “இப்போது, நீங்கள் இந்தப் பக்கமாக இருக்கும் குவியலில் இருந்து, உங்களுக்கு விருப்பமாக, நிறையவே பழங்களை எடுத்துக் கொள்ள முடியும்! “

அந்த வயதான பெண்மணி அவருக்கு நன்றி கூறினாள், இனிமையான புன்சிரிப்போடு! பிறகு அவள் அடுத்த குவியலுக்குத் திரும்பினாள்; அது புதியதாக, முறையாகப் பழுத்த மாம்பழங்களைக் கொண்டிருந்தது. அவள் உண்மையாக விரும்பிய மாம்பழங்களை, அதிலிருந்து பொறுக்கி எடுத்தாள்.

அந்த பழவியாபாரியின் கண்கள் அகன்று விரிந்தன, அவருக்கு ஒரே வியப்பு! அவர்தான், இந்தப் பரீட்சையில் தோற்றுப் போனவர்; இந்தக் கணக்கில் ஏமாந்து விட்டதை உணர்ந்தார். அதாவது, வயதான அனுபவம் வாய்ந்த மக்கள் அனைவரும், சாதாரண உடல் உணர்வுகளை மட்டுமே, முழுவதுமாக சார்ந்து இருக்க மாட்டார்கள். அவர்களது அனுபவமும், நுண்ணறிவும், அவர்களை எந்த ஒன்றையும் சரியாக அடையாளம் கண்டுகொள்ள உதவுகிறது.
🌹🌹🌹🌹🌹🌹vedda copy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *