ஒரு நபர் தனது பிறந்த விபரங்கள் இல்லாமல் தொடர்புகொள்ளும்போது அந்த நேரத்தை வைத்து அவர்களுக்கு நடக்கக்கூடியதை தெளிவாக சொல்லப்படுகின்றது. அந்த நபர் என்ன காரணத்திற்காக எதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலுடன் அழைத்துள்ளார்கள் என்று சரியாக கணித்து சொல்வதுடன் தீர்வுசொல்லப்படுகின்றது
நேரில் வரும்போது அவர்கள் வந்த நேரம், வந்த தமிழ் மாதம் மற்றும் தமிழ் மாதத் தேதி ஆகிய இம்மூன்றையும் அடிப்படையாய் கொண்டு ஆரூடம், உதயம், கவிழ்ப்பு, ஆக மூன்றையும் தேர்வுசெய்து நடக்கும் கோச்சர கிரகத்தின் உதவியுடன் இவர்களது பிரச்சனை எத்தனை நாள், வாரம், மாதம், வருடத்தில் முடிவுக்கு வரும் என்றும் மேலும் அது முடியும்வரை இவர்களுக்கு உபாசனை தெய்வம் ஆதாவது உதவி செய்யகூடிய தெய்வம் யார் என்றும் அதன் வழிபாட்டுமுறை என்ன என்றும் அவர்களுக்கு வழிவகுத்து கொடுக்கப்படுகின்றது
ஒரு நபர் நேரில் வரும்போது தனது ஜாதக விபரங்கள் இல்லாவிடினும் அவர்கள் வாங்கிவரக்கூடிய வெற்றிலையை வைத்து அதன் அமைப்பு, அதன் வடிவம், வரிசைமுறை, எண்ணிக்கை இதன் உதவியுடன் அவர்களுக்கு எந்த பாவகத்தில் பிரச்சனை என்பதையும் அதற்குண்டான தீர்வு மற்றும் வழிபட்டு தெய்வம் பஞ்சம் பூத அடிப்படையில் நடக்கும் ஹோரை உதவியுடன் தீர்வு வழங்கப்படுகின்றது.
தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளும்போது, தொடர்புகொள்ளும் நேரத்தை கொண்டு அவர்களுக்கு எந்த பாவக விவரம் தேவையோ அதையும் மேலும் அவர்களுக்கு நடக்கக்கூடிய திசை புத்தி விபரங்களையும் தொலைபேசியில் தெரிவிக்கப்படும் அதன் பின் அவர்கள் நேரில் வந்து அவர்கள் பிறந்த நாள் விவர அடிப்படையில் அவர்களுக்கு கொடுப்பினை எத்தனை சதவீதம் உள்ளது என்பதை விளக்கத்துடன் தெளிவுபடுத்தப்படுகின்றது
ஒருவர் பெற்றிருக்கின்ற நட்சத்திர அடிப்படையில் அவர்கள் எந்த கிரக சாபம் பெற்றுள்ளார்கள் என்றும் அவர்கள் பெற்ற திதி அடிப்படையில் அவர்களுக்கு எந்த பாவகம் சூனியமாகி உள்ளது என்பதையும் அதற்க்கு தீர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் குமாரசாமியம் என்ற நூலின் உதவியுடன்
ஒருவரது லகன புள்ள, மற்றும் ஜென்ம நட்சத்திரத்தின் உதவியுடன் அந்த ஜாதகருடைய காரணநாதன் கையில் கொண்டு இவர்களுக்கு கிரகங்கள் வாங்கிய நட்சத்திர சாரத்தை கொண்டு மற்றும் அவர்கள் பிறந்த தமிழ் மாதத்தை கொண்டு இவர்களுக்கு எந்த உறுப்பில் நோய் உருவாகும் என்றும் எந்த விதமான மருத்துவத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் எந்த தமிழ் காயை இவர்கள் எடுத்து கொள்ளும்போது எதிர்தன்மை (சக்தி) உண்டாகும் என்பதையும் இதன்மூலம் வழிகாட்டப்படுகின்றது
ஒருகாரியம் செய்யும்போது எதற்காக, என்ன காரணத்திற்காக செய்கின்றோம் என்கின்ற விளக்கம் இங்கு தெளிவாக தரப்படுகின்றது என்பது நேயர்களின் கருத்தாக உள்ளது