நேரில் வரும்போது அவர்கள் வந்த நேரம், வந்த தமிழ் மாதம் மற்றும் தமிழ் மாதத் தேதி ஆகிய இம்மூன்றையும் அடிப்படையாய் கொண்டு ஆரூடம், உதயம், கவிழ்ப்பு, ஆக மூன்றையும் தேர்வுசெய்து நடக்கும் கோச்சர கிரகத்தின் உதவியுடன் இவர்களது பிரச்சனை எத்தனை நாள், வாரம், மாதம், வருடத்தில் முடிவுக்கு வரும் என்றும் மேலும் அது முடியும்வரை இவர்களுக்கு உபாசனை தெய்வம் ஆதாவது உதவி செய்யகூடிய தெய்வம் யார் என்றும் அதன் வழிபாட்டுமுறை என்ன என்றும் அவர்களுக்கு வழிவகுத்து கொடுக்கப்படுகின்றது