தேன் காரணம் ஏன் தெரியுமா?

தேன் கொண்டு வந்தவரைப் பார்த்து,

நேற்று ஏன் தேன் கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார்.

அதற்கு அவர் கூறிய இனிமை பொருந்திய விடை…

ஐயா நீங்கள்
கூறியதை நினைத் தேன்

கொல்லிமலைக்கு நடந் தேன்

பல இடங்களில் அலைந் தேன்

ஓரிடத்தில் பார்த் தேன்

உயரத்தில் பாறைத் தேன்

எப்படி எடுப்பதென்று மலைத் தேன்

கொம் பொன்று ஒடித் தேன்

ஒரு கொடியைப் பிடித் தேன்

ஏறிச்சென்று கலைத் தேன்

பாத்திரத்தில் பிழிந் தேன்

வீட்டுக்கு வந் தேன்

கொண்டு வந்ததை வடித் தேன்

கண்டு நான் மகிழ்ந் தேன்

ஆசையால் சிறிது குடித் தேன்

மீண்டும் சுவைத் தேன்

உள்ளம் களித் தேன்

உடல் களைத் தேன்

உடனே படுத் தேன்

கண் அயர்ந் தேன்

அதனால் மறந் தேன்

காலையில் கண்விழித் தேன்

அப்படியே எழுந் தேன்

உங்களை நினைத் தேன்

தேனை எடுத் தேன்

அங்கிருந்து விரைந் தேன்

வேகமாக நடந் தேன்

இவ்விடம் சேர்ந் தேன்

தங்கள் வீட்டை அடைந் தேன்

உங்களிடம் கொடுத் தேன்

என் பணியை முடித் தேன்

என்றார்..!

அதற்கு …தேன் பெற்றவர்
தேனினும், இனிமையாக உள்ளது உமது விடை..

இதனால் தான்
நம் முன்னோர்கள் தமிழைத்
தமிழ்த் தேன் என்று உரைத்தரோ… எனக் கூறி மகிழ்ந் தேன் என்றார்.

💐
படித் தேன்..

படித்ததில் சுவைத் தேன்

உடனே
பகிர்ந் தேன்.
வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்
ராக்போர்ட் ராஜ் P. S
B. Lit, MA—Astro
7558156423

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *