நம்மோடு வரும் நண்பன்

ஒரு அழகிய நாட்டில் அரசனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது பகுதியில் வேலை பார்க்கும் நபர் ஒருவருக்கு அரசவையில் இருந்து நாளை காலை உங்களுக்கு விசாரணை என்று தகவல் வர அவர் என்ன செய்வது என்று புரியாமல் நம்மை போலவே தமக்கு பழக்கமான நம்பிக்கையான நண்பர்களை👭👬👫 பார்க்க சென்றான் ★முதல் நண்பர் மிகவும் நெருக்கமான நண்பனாகிய அவன் என்னால் முடியாது என்று சொல்லி விட மிகவும் நம்பி வந்தேன் இவன் இப்படி சொன்னது எனக்கு ஏமாற்றம் தான் என்று சொல்லி நம்மை போலவே அடுத்த நண்பனை பார்க்க சென்றார். அவர் அவ்வளவு நெருக்கமான நண்பர் இல்லை என்று சொல்லி கொண்டே ★★இரண்டாவது நண்பனை சந்திக்க சென்றார் அவர் இவரை வரவேற்று தகவலை கேட்டு தெரிந்து கொண்டு சரி நான் உனக்கு துணையாக வருகிறேன் ஆனால் இது அரசரை நேரில் சந்தித்து பேச முடியாது ஆனால் வாசல் வரை வருகிறேன் என்று சொன்னார் இவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை நமக்காக வாதாடி நம்மை விடுதலை செய்ய உதவுவான் என்று பார்த்தால் இவனே பயப்படுறான். சரி பாப்போம் என்று சொல்லி யோசிக்க ★★★மூன்றாவது நண்பன் அவனோடு அவ்வளவு பழக்கமும் இல்லை அவனோடு பேசியே வெகு நாட்கள் ஆகிறது எப்படி பேசுவது சரி கடைசியாகப் ஒரு முயற்சி பேசி பார்ப்போம் என்று அவரை சென்று பார்க்க அவரோ என்ன ஏது என்று ஒரு விவரமும் கேட்காமல் நண்பனுக்கு ஒரு பிரச்சனையின நாம தான் உதவி செய்ய வேண்டும் என்று சொல்லி வா போகலாம் என்று உடனே சென்று திறமையாக பேசி நண்பனை மீட்டு நட்பு பாராட்டி மகிழ்ந்தார்கள். அது போல தான் நமக்கும் ★முதல் நண்பன் — பணம் வீட்டோடு முடிந்தது ★★இரண்டாவது நண்பன் — சொந்தம் சுடுகாடு வரை முடிந்தது ★★★மூன்றாவது நண்பன் — நற்செயல்கள் நமது இறப்புக்கு பிறகும் நம்மை தொடரும் . ஆனால் இப்போது நாம் அதற்கு அதிக கவனம் அல்லது முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது இனியாவது அந்த நண்பனோடு உறவாடி மகிழ்வோம்

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ் P. S. B. Lit, MA – Astro 7558156423