திரு. P.S.ராஜ் Dip., CAD., B.Lit., MA., Astrology
குருநாதர் திரு.வைரம் சாத்தி திருநாவுக்கரசர் அவர்கள் முதல் குருவாக ஜோதிடத்திற்கு வித்திட்டவர். 2006-2011 வரை ஐயாவுடன் பயணம் செய்து அவரது பஞ்சமுக ஜோதிட மையம் மூலமாக இந்த ஜோதிட கலை துறைக்குள் நுழைய முதல் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல குருமார்களின் வழிகாட்டுதல்கள் / வழிநடத்துதல்களுடன் இந்த ஜோதிட துறையில் பயணம் செய்து வருகின்றார்.
ஐயா அவர்கள் 2011-2013 வரை மலை பகுதிகளில் மூலிகை சம்பந்தபட்ட ஆய்வை மேற்கொண்டு மருத்துவ ஜோதிடம் பரிச்சியபடுத்தி தேர்ச்சிப்பெற்று மேலும் MA (ASTROLOGY) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்து, 2015இல் பட்டம் பெற்று (ஜோதிட ரத்தின, ஜோதிட வாசற்படி, வாஸ்து கன்சல்டிங் (SCIENTIFIC CONSULTING). 2015து முதல் சேவை செய்ய ஆரம்பித்து இன்றுவரை சேவை செய்துக்கொண்டு இருக்கின்றார்.
மேலும் இதனுடன் ஆத்துமாக்களை அழைத்து பேசி சரியான தீர்வு தரப்படுகின்றது. ஆகஸ்ட் 18, 2010 ஆம் ஆண்டு ரமணி ஆன்மிக ஆராய்ச்சியார் திரு. இரா.ரமணி ஐயா அவர்களிடம் ஆத்மாவை அழைத்து பேசுவதற்கு உண்டான தீட்சை பெற்று மற்றும் சென்னை திருமுருக ஆராய்ச்சிமைய்ய நிறுவனர் ஐயா, சி.எம்.ரத்தினசாமி (செயலாளர், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் சங்கம்) அவர்களிடம் முழுமை பெற்று, ஆவியுலக தொடர்பில் ஆத்துமாக்களிடம் பேசும் முறை கையாளப்பட்டு கொண்டு இருக்கிறது.
ஆவியுலக ஆத்துமாக்களை அழைத்து பேசும் முறை:
வழிகாட்டும் ஆத்துமா உதவியுடன் சென்ற பிறவியில் ஒருவர் எப்படி இறந்தார் என்பதை கண்டறிந்து வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்வு சொல்லப்படுகின்றது.
ஒருகாரியம் செய்யும்போது எதற்காக, என்ன காரணத்திற்காக செய்கின்றோம் என்கின்ற விளக்கம் இங்கு தெளிவாக தரப்படுகின்றது என்பது நேயர்களின் கருத்தாக உள்ளது